ETV Bharat / city

கழிவுநீரால் மாசடையும் செல்லூர் கண்மாய்... அரசு நடவடிக்கை எடுக்குமா?

மதுரை: செல்லூர் கண்மாயில் கலக்கும் சாக்கடை மற்றும் கழிவு நீரால் அப்பகுதியின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகக் கூறி, அதனைப் போர்க்கால அடிப்படையில் சரி செய்ய பொதுப்பணித்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கழிவுநீரால் மாசடையும் செல்லூர் கண்மாய்
author img

By

Published : Sep 5, 2019, 4:58 PM IST

மதுரை நகர்ப்பகுதிக்குள் உள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளுள் ஒன்று வைகையின் வடபுறம் அமைந்துள்ள செல்லூர் கண்மாய். ஆனையூர், சிலையனேரி, தத்தனேரி, எஸ்.ஆலங்குளம் ஆகிய கண்மாய்களின் போக்குக் கால்வாய்கள் மூலமும், மழைநீர் வாயிலாகவும் செல்லூர் கண்மாய் நீரைப் பெறுகிறது.

இக்கண்மாயின் மிகுதியான நீர் செல்லூர் வாய்க்கால் மூலமாக வழிந்தோடி, ஆழ்வார்புரம் அருகே வைகையில் கலக்கிறது. இதன் மொத்த தண்ணீர் பரப்பளவு 38.35 ஹெக்டேராகும். அதேபோல் 16.50 மில்லியன் கன அடி நீரைத் தாங்கும் கொள்ளளவைக் கொண்டது. இந்தக் கண்மாயின் மூலமாக 78.73 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெற்றிருந்தன. ஆனால், தற்போது அவையனைத்தும் குடியிருப்புகளாகிவிட்டன. தற்போதைய நிலையில் செல்லூர் கண்மாய் நிலத்தடி நீரை உயர்த்துவதற்கான நீர்நிலையாக மட்டுமே திகழ்கிறது.

ஆகையால் இக்கண்மாயின் நீர் இருப்பைப் பொறுத்து, இதன் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு நிலத்தடி நீர் கிடைக்கும். பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு, தற்போது இந்தக் கண்மாயில் தமிழ்நாடு அரசு ரூ.48 லட்சத்திற்குக் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கரையைப் பலப்படுத்தல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள கால்வாய்களின் கரைகளை உயர்த்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், செல்லூர்க் கண்மாய்க்குள் பல்வேறு இடங்களிலிருந்தும் வரும் கழிவுகள் தான் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாகக் கண்மாயின் பல்வேறு பகுதிகளிலும் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தில் கழிவுகள் ஊடுருவுவதால் நிலத்தடி நீரும் பாழ்படும் நிலை உருவாகி இருக்கிறது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இப்பகுதியிலுள்ள கண்ணன் என்பவர் கூறுகையில், 'மதுரையின் வடபகுதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலையே செல்லூர் கண்மாய். இதனைச் சார்ந்து ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆகையால் நிலத்தடி நீர் மட்டம் பாழ்படாமல் தடுக்க வேண்டுமானால், கண்மாயின் அருகிலுள்ள குடியிருப்புகளிலிருந்து கழிவுநீர் கலக்காமல் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்' என்றார்.

கழிவுநீரால் மாசடையும் செல்லூர் கண்மாய்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

செல்லூர் கண்மாய் மதுரையின் நிலத்தடி நீராதாரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றோ, அதே அளவிற்கு இக்கண்மாயில் கழிவு நீர் கலந்து மாசுபடுவதும் உடனடியாக தடுக்கப்பட வேண்டிய பணியாகும். குடிமராமத்துப் பணியோடு, கழிவு நீர் கலப்பதைத் தடுப்பதற்கான பணியையும் மதுரை மாநகராட்சியும் பொதுப்பணித்துறையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Intro:செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுகளால் மாசாகும் நிலத்தடி நீர் - பொதுமக்கள் வேதனை

செல்லூர் கண்மாயில் கலக்கும் சாக்கடை மற்றும் கழிவு நீரால் அப்பகுதியின் நிலத்தடி நீர் பாதிப்பிற்கு ஆளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை நகர்ப்பகுதிக்குள் உள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளுள் ஒன்று செல்லூர் கண்மாய். வைகையின் வடபுறம் அமைந்துள்ளது. ஆனையூர், சிலையனேரி, தத்தனேரி மற்றும் எஸ் ஆலங்குளம் கண்மாய்களின் போக்குக் கால்வாய்கள் மூலமும், மழைநீர் வாயிலாகவும் செல்லூர் கண்மாய் நீரைப் பெறுகிறது.Body:செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுகளால் மாசாகும் நிலத்தடி நீர் - பொதுமக்கள் வேதனை

செல்லூர் கண்மாயில் கலக்கும் சாக்கடை மற்றும் கழிவு நீரால் அப்பகுதியின் நிலத்தடி நீர் பாதிப்பிற்கு ஆளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை நகர்ப்பகுதிக்குள் உள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளுள் ஒன்று செல்லூர் கண்மாய். வைகையின் வடபுறம் அமைந்துள்ளது. ஆனையூர், சிலையனேரி, தத்தனேரி மற்றும் எஸ் ஆலங்குளம் கண்மாய்களின் போக்குக் கால்வாய்கள் மூலமும், மழைநீர் வாயிலாகவும் செல்லூர் கண்மாய் நீரைப் பெறுகிறது.

இக்கண்மாயின் மிகு நீர் செல்லூர் வாய்க்கால் மூலமாக வழிந்தோடி ஆழ்வார்புரம் அருகே வைகையில் கலக்கிறது. இதன் மொத்த தண்ணீர் பரப்பளவு 38.35 ஹெக்டேராகும். 16.50 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவைக் கொண்டது. இந்தக் கண்மாயின் மூலமாக 78.73 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெற்றிருந்தன. தற்போது அவையனைத்தும் குடியிருப்புகளாகிவிட்டன.

தற்போதைய நிலையில் செல்லூர் கண்மாய் நிலத்தடி நீரை உயர்த்துவதற்கான நீர்நிலையாக மட்டுமே திகழ்கிறது. ஆகையால் இக்கண்மாயின் நீர் இருப்பைப் பொறுத்து இதன் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு நிலத்தடி நீர் கிடைக்கும்.

பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு தற்போது இந்தக் கண்மாயில் தமிழக அரசு ரூ.48 லட்சத்திற்கு குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கரையை பலப்படுத்தல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள கலிங்கினை உயர்த்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது செல்லூர்க் கண்மாய்க்குள் பல்வேறு இடங்களிலிருந்து வரும் கழிவுகள் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக கண்மாயின் பல்வேறு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடிக்குள் கழிவுகள் ஊடுருவுவதால் நிலத்தடி நீர் பாழ்படும் நிலையும் உருவாகிறது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் அபுபக்கர் கூறுகையில், 'தமிழக அரசு குடிமராமத்துப் பணிகள் மூலம் தற்போது செல்லூர் கண்மாயின் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டாலும், இதன் மேம்பாட்டிற்காக மேலும் அதிகமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

செல்லூர் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் சங்கரபாண்டியன் பேசுகையில், 'குலமங்கலம், பூதக்குடி, பனங்காடி, கோசாகுளம் மற்றும் ஆனையூர் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கழிவுநீர் வரத்துக்கால்வாய் வழியாக செல்லூர் கண்மாய்க்குள் வந்து சேருகிறது. ஆகையால் இந்த நீரைப் பயன்படுத்துகின்ற செல்லூர் பகுதி மக்கள் மலேரியா, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

அதேபோன்று நிலத்தடி நீரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசும் மாநகராட்சியும் தேவையான பணிகளை மேற்கொண்டாலும்கூட பொதுமக்களும் நீர்நிலைகளை தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வைப் பெற வேண்டும். செல்லூர் கண்மாயின் நீர்தான் வாய்க்கால் வழியாக வைகையாற்றைச் சென்றடைகிறது. அவ்வாறு கலக்கின்ற இடத்தில்தான் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. ஆகையால் கழிவுநீரின் புகலிடமாக செல்லூர் கண்மாய் மாறாமல் தடுக்க வேண்டிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும்' என்றார்.

சங்க பொருளாளர் கண்ணன் கூறுகையில், 'மதுரையின் வடபகுதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலையே செல்லூர் கண்மாய். இதனைச் சார்ந்து ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆகையால் நிலத்தடி நீர் பாழ்படாமல் தடுக்க வேண்டுமானால், கண்மாயின் அருகிலுள்ள குடியிருப்புகளிலிருந்து கழிவுநீர் கலக்காமல் பாதுகாக்க வேண்டிய மிகவும் அவசியம்' என்றார்.

செல்லூர் கண்மாய் மதுரையின் நிலத்தடி நீராதாரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றோ, அதே அளவிற்கு இக்கண்மாயில் கழிவு நீர் கலந்து மாசுபடுவதும் உடனடியாக தடுக்கப்பட வேண்டிய பணியாகும். குடிமராமத்துப் பணியோடு, கழிவு நீர் கலப்பதைத் தடுப்பதற்கான பணியையும் மதுரை மாநகராட்சியும் பொதுப்பணித்துறையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை...

(இதற்குரிய வீடியோவை tn_mdu_03a_sellur_tank_waste_spl_story_visual_9025391 / tn_mdu_03b_sellur_tank_waste_spl_story_bytes_9025391 என்ற பெயர்களில் மோஜோ மூலமாக அனுப்பியுள்ளேன்)
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.