கரோனா பொது முடக்கத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் மதுக் கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ரயில்கள் மூலம் வெளிமாநில மது பாட்டில்கள் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படுகின்றன என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து ரயில்வே காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக மதுரை ரயில் நிலையத்தில் உள்ள பார்த்தல் அலுவலகத்தில் இன்று சோதனை மேற்கொண்டபோது 68 ஆயிரத்து 760 லிட்டர் கொள்ளளவு கொண்ட 430 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த அருண்குமார் (33), ஆண்டாள்புரத்தை சேர்ந்த சந்திரசேகரன் (33) ஆகிய இருவர் ரயில்வே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, மதுரை மாநகர மதுவிலக்கு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஊரடங்கு காலத்தில் ரயில் மூலம் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 732 மதுபாட்டில்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் கொள்ளளவு 215.550 லிட்டர் ஆகும். இந்தச் சட்டவிரோத கடத்தல் தொடர்பாக இதுவரை 20 நபர்கள் மீது மதுரை ரயில்வே காவல் துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற செயல்கள் மேலும் தொடருமானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ரயில்வே காவலர்கள் அறிவித்துள்ளனர்.