ETV Bharat / city

கார் வாங்க முடியாத நிலைமைக்கு மத்திய அரசு தள்ளியிருக்கிறது: சீமான்

மதுரை: சொந்தமாகக் கார் வாங்க முடியாத நிலைமைக்கு மத்திய அரசு தள்ளி விட்டிருக்கிறது அதனால் அனைவரும் ஓலா, உபர் போன்ற வாகனங்கள் பயன்படுத்துகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சீமான்
author img

By

Published : Sep 11, 2019, 1:34 PM IST

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சொந்தமாகக் கார் வாங்க முடியாத நிலைமைக்கு மத்திய அரசு தள்ளிவிட்டிருக்கிறது அதனால் அனைவரும் ஓலா, உபர் போன்ற வாகனங்கள் பயன்படுத்துகிறார்கள். அதுபோன்ற நிறுவனங்களைத் தொடங்கி அதனை வேலைசெய்ய வைத்தவர்கள் இவர்கள்தானே. பொறுப்புள்ள அமைச்சர் பதிவு செய்யும் கருத்தாக இது இல்லை; வேடிக்கையாக இருக்கிறது. இதனைப் பார்த்து வேதனையோடு சிரித்துக்கொண்டு போக வேண்டியதாயிருக்கிறது.

ஆளுங்கட்சியைத் தாக்கி பேசுவதுதான் எதிர்க்கட்சியின் வேலை. திமுக ஆட்சியில் அனைத்திற்கும் வெள்ளை அறிக்கை கொடுத்திருக்கிறார்களா? அப்படி ஒன்றும் கொடுக்கவில்லை. ஜெயலலிதா இருக்கும்பொழுது பல முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. எடப்பாடி இருக்கும்போதும் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டிற்கு என்ன முடிவு என்று தெரியவில்லை. இப்பொழுது முதலமைச்சர் வெளிநாடு சென்று பார்வையிட்டு வந்திருக்கிறார்

ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சரும் பல கோடி ரூபாய் பதுக்கிவைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் வெளிநாட்டிலிருந்து முதலீடு கொண்டுவருவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் இது ஒரு வேடிக்கையான செயல்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு

எம்ஜிஆர், பெரியார் சிலை எங்கேயாவது உடைக்கப்படுகிறதா? ஆனால் மண்ணின் மகத்துவம் வாய்ந்த தலைவர்களாக இருக்கக்கூடிய காமராஜர், முத்துராமலிங்கம், இம்மானுவேல் சேகரன் ஆகியோரின் சிலைகள் கூண்டுக்குள்தான் இருக்கின்றன. இறந்துபோன எங்களது முன்னோர்களுக்கு வணக்கம் செலுத்தும்போது எதற்கு 144 தடை உத்தரவு? அப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளை அரசுதான் உருவாக்கியது” என்றார்.

Intro:மதுரையில் சீமான் பேட்டி
Body:*மதுரையில் சீமான் பேட்டி*
Conclusion:மதுரையில் சீமான் பேட்டி

சொந்தமாக கார் வாங்க முடியாத நிலைமைக்கு மத்திய அரசு தள்ளி விட்டிருக்கிறது அதனால் அனைவரும் ஓலா உபர் போன்ற வாகனங்கள் பயன்படுத்துகிறார்கள்

அது போன்ற நிறுவனங்களைத் தொடங்கி அதனை வேலைசெய்ய வைத்தவர்கள் இவர்கள் தானே

பொறுப்புள்ள அமைச்சர் பேசுகிறார் பதிவு செய்கிற கருத்தாக இது இல்லை வேடிக்கையாக இருக்கிறது அதனால்தான் இதுபோன்ற கேள்விகளை அனைவரும் எழுப்புகிறார்கள் இதனைப் பார்த்து வேதனையோடு சிரித்துக் கொண்டு போக வேண்டியதாயிருக்கிறது.

ஆளுங்கட்சியை தாக்கி பேசுவதுதான் எதிர்க்கட்சியின் வேலை திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அனைத்திற்கும் வெள்ளையறிக்கை கொடுத்திருக்கிறார்கலா?? அப்படி ஒன்றும் கொடுக்கவில்லை அமையார் ஜெயலலிதா இருக்கும் பொழுது பல முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது எடப்பாடி இருக்கும்போதும் நடத்தப்பட்டது அந்த மாநாட்டிற்கு என்ன முடிவு என்று தெரியவில்லை இப்பொழுது முதல்வர் வெளிநாடு போயி பார்வையிட்டு வந்திருக்கிறார்

எனது கேள்வி ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சரிடம் வீட்டிலிருந்து பலகோடி பதுக்கும்போதும் 4000 கோடி 3000 கோடி பதுக்கி வைத்திருக்கிறார்கள், ஆனால் இவர்கள் வெளிநாட்டில் இரு முதலீடு கொண்டு வருவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் இது ஒரு வேடிக்கையான செயல் இந்த பயணம் என்று முதலாளிகள் வந்து நம் நாட்டில் முதலீடு செய்யும் பொழுதுதான் இதனைப் பற்றி பேச முடியும்.

எம்ஜிஆர் பெரியார் சிலை எங்கேயாவது இடிக்கப்படுகிறதா ஆனால் மண்ணின் மகத்துவம் தலைவர்களாக இருக்கக்கூடிய காமராஜர் முத்துராமலிங்கத் தேவரை இம்மனுவெல் சேகர் சிலைகள் கூண்டுக்குள் தான் இருக்கிறது

இறந்து போன எங்களது முன்னோர்களுக்கு வணக்கம் செலுத்தும் பொழுது எதுக்கு 144 தடை உத்தரவு அப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளை அரசு தான் உருவாக்கியது,

முத்துராமலிங்க இருக்கு செலுத்தக்கூடிய மரியாதை வேலுநாச்சியாருக்கு செலுத்துவதில்லை சாதியை வாக்காக பார்க்கின்றது திராவிட அரசியல்,
முக்கிய அரசியல்வாதிகள் இம்மானுவேல் சேகர் அவர்களுக்கு நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வருவதில்லை அப்படி அவர்கள் வந்தார்கள் என்றால் தேவர் சாதியினர் ஓட்டு அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை என்று கருதுகிறார்கள், நாங்கள் அவ்வாறு பார்ப்பதில்லை.

என்றாவது ஒருநாள் ஜெயலலிதா கருணாநிதி அவர்கள் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று பார்த்திருக்க முடியாது..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.