மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கருவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்( 62). இவருக்கு அமுதா என்ற மனைவியும், அசோக்குமார் என்ற மகனும் உள்ளனர்.
கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆறுமுகம் காவலாளியாக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று (ஆகஸ்ட் 9) இரவு பணிக்கு வந்த ஆறுமுகம் இன்று (ஆகஸ்ட் 10) காலையில் மாற்றுப் பணிக்கு வந்த காவலாளி பார்த்தபோது காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் நிறுவனத்தில் உள்ள கிணற்றில் பார்த்தபோது அவருடைய செருப்பு இருந்தது தெரியவந்தது. உடனடியாக திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து ஒரு மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து அவருடைய உடலை மீட்டனர். தகவலறிந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக இருந்த ஆறுமுகம், கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.