ETV Bharat / city

மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு குறித்து விசாரணை நடைபெறுகிறது - ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை

மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் அரசுக்கு 35 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது.

under
under
author img

By

Published : Jul 13, 2022, 9:23 PM IST

மதுரை: மதுரையைச் சேர்ந்த மோகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2011ஆம் ஆண்டு எல்லை தாண்டும் மீனவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக அதிநவீன வசதி கொண்ட வாக்கி-டாக்கி மீனவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன்படி 3 டவர்கள் அமைக்கப்பட்டு 3 ஆயிரத்து 100 வாக்கி டாக்கி வழங்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தில் 37 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை இந்த ஊழல் குறித்து முறையாக விசாரணை நடைபெறவில்லை. இதுகுறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் விசாரணை செய்ய மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கியதில் நடைபெற்ற ஊழல் குறித்து உடனடியாக விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மீனவர்கள் பயன்பாட்டிற்கான அதிநவீன வாக்கிடாக்கி வாங்கியதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக பல புகார்கள் வந்துள்ளன.

விசாரணையில் வாக்கிடாக்கி வாங்கியதில், அரசுக்கு 35 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வந்தது. இதுதொடர்பாக 144 ஆவணங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையை முடிக்க 3 மாத கால அவகாசம் தேவை" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மனுவை திரும்பப்பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவை திரும்பப் பெற மனுதாரருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 4,000 கோடி ரூபாய் கடன் மோசடி விவகாரம்: நான்கு பேருக்கு நீதிமன்ற காவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.