ETV Bharat / city

சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கு: 6 மாதத்திற்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவு - சாத்தான்குளம்

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கின் விசாரணையை ஆறு மாதத்துக்குள் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Sathankulam custodial death Sathankulam custodial death Madurai HC Branch order Madurai HC Branch latest order சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை

author img

By

Published : Mar 18, 2021, 3:14 PM IST

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்தனர்.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விசாரித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த டிசம்பர் 10ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக குற்றவாளிகள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உறவினரின் செல்போன் மூலமாக யாரிடமோ பேசி, ரூ.36 லட்சத்தை வழங்கி விடுமாறு மிரட்டிக் கொண்டிருந்தார்.

இது தொடர்பாக நீதித்துறை நடுவரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். அன்றைய தினமே குற்றவாளிகள், பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் மற்றும் செய்தியாளர்களை மிரட்டியதோடு, மோசமான வார்த்தைகளில் அவர்களை திட்டினர்.

ஆகவே இந்த வழக்கில் பணபலம் காரணமாக சாட்சிகளை மிரட்டி, கலைக்க வாய்ப்புள்ளது. எனவே மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையை குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து அதற்குள் முடிக்குமாறு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் ஆறு மாதத்திற்குள் வழக்கு விசாரணையை முடிக்க உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.