மதுரை: அண்மையில் போலாந்து நாட்டில் சர்வதேச அளவில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக கண்டுபிடிப்பாளர்களையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகப் பாராட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்களும் சென்றிருந்தனர். அப்போது, நமது தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்த 12 வயது சிறுவனும் அதில் கலந்து கொண்டு அவரின் கண்டுபிடிப்புக்காக தங்கப்பதக்கத்தையும், 2 சிறப்புப்பரிசுகளையும் பெற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ந்துள்ளார்.

தங்கம் வென்ற மதுரை பள்ளி மாணவன்: சிறுவனின் கண்டுபிடிப்பையும் அதற்கு சர்வதேச அளவில் கிடைத்த வெகுமதியையும் பாராட்டும் விதமாக, மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் இன்று (ஏப்.5) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 'மாணவன் அகிலேஷ் மதுரை விகாசா பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கிறார். கடந்த 2021இல் போலந்தில் நடைபெற்ற International Warsaw invention showஇல் பங்கேற்று தனது Hydrogen fuel cell For motorized vehicle கண்டுபிடிப்பிற்காக தங்கப்பதக்கத்தையும், 2 சிறப்பு விருதுகளையும் வென்று மகத்தான சாதனைப்படைத்துள்ளார். ருமேனியாவின் சிறப்பு விருது ஒன்றினையும் வென்று தந்திருக்கிறார், நாட்டிற்கு.

இதையும் படிங்க: சிலம்பத்தில் சிகரம் தொடத் துடிக்கும் மதுரை சிறுவன்!