சிவகங்கை: திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக 7ஆவது கட்ட அகழாய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
கீழடி அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பாக 44 செ.மீ உயரமுள்ள சுடு மண் வட்டை போன்ற அமைப்பில் அதன் வெளிப்புறம் கயிறு போன்ற நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட தொட்டி ஒன்று கீழடியில் கண்டறியப்பட்டது.
![ஆராய்ச்சியாளர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-02-keezhadi-agaram-ring-well-script-7208110_15072021132828_1507f_1626335908_760.jpg)
10க்கும் மேற்பட்ட உறை கிணறுகள்
இதன் தொடர்ச்சியாக அகரம் அகழாய்வில் இன்று (ஜூலை.15) நான்கு உறைகளுடன் கூடிய சுடுமண் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மேற்பகுதி சிதைந்த வடிவில் காணப்படுகிறது. இது 80 செ.மீ. விட்டமும் 22 செ.மீ. உயரமும் கொண்டதாக உள்ளது.
![உறைகிணறு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-02-keezhadi-agaram-ring-well-script-7208110_15072021132828_1507f_1626335908_142.jpg)