ETV Bharat / city

'மாநில மொழியில் பாடத்திட்டங்களை கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும்' - நீதிமன்றம் கருத்து - reservation in govt jobs for students who learned full time tamil medium court orders universities to respond

மதுரை : தொழில்துறை சார்ந்த படிப்புகளை ஆங்கிலத்தில் கற்பதன் மூலமே மாணவர்கள் உலகம் முழுவதும் சென்று பணியாற்ற முடியும் என்பதால் மாநில மொழியில் பாடத்திட்டங்களை கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம்
உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம்
author img

By

Published : Dec 16, 2020, 8:43 PM IST

தமிழ் வழியில் முழுநேரமாகக் கல்வி பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு குரூப் 1 பணியிட நியமனத்தை வழங்கக் கோரி மதுரையை அடுத்துள்ள திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "நான் மதுரை சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டப்படிப்பை தமிழ் வழியில் பயின்று கடந்த 2017ஆம் ஆண்டில் வழக்குரைஞராகப் பதிவு செய்துள்ளேன். 2019 ஜனவரி 1ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது துணை ஆட்சியர், டி.எஸ்.பி, வணிக வரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. அதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, எழுத்து தேர்வும் எழுதினேன். அதைத் தொடர்ந்து பிரதான எழுத்துத் தேர்வு அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. விதிப்படி தமிழ் வழியில் கல்வி பயின்றவருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.

அந்த இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு நான் தகுதியானவனாக இருந்தபோதிலும் எனக்கு அந்த சலுகை வழங்கப்படவில்லை. இது குறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இடஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலைக் கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது. தொலைநிலைக் கல்வியில் பயில்வோர் சில பாடங்களை ஆங்கில வழியில் பயில்கின்றனர். சில பாடங்களை தமிழ் வழியில் படிக்கின்றனர். ஆகவே, இவர்களை தமிழ் வழியில் பயின்றவர்களாக கருத இயலாது.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் கேட்டபோது எவ்வித தகவலையும் வழங்கவில்லை. டி.என்.பி.எஸ்.சியின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலைக் கல்வி பயின்றவர்களே பெற்று வருகின்றனர்.

எனவே, தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சலுகை அடிப்படையில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கத் தடை விதிக்க வேண்டும். தொலைநிலைக் கல்வியில் அல்லாமல் கல்லூரிக்கு சென்று தமிழ் வழியில் பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப் 1 பணியிட நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று (டிச.16) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் - 1 தேர்வில் 181 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தமிழ் வழி கல்விக் கற்றோருக்கு வழங்கப்பட்ட 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் 34 நபர்கள் தேர்வாகியுள்ளனர். இதில் 7 நபர்கள் மட்டுமே கல்லூரிக்கு சென்று முழுமையாக தமிழ் வழியில் பயின்றவர்கள். மற்றவர்கள் 20 விழுக்காடு தமிழ் வழி இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக தொலைதூரக் கல்வி ஊடாக தமிழ் வழியில் பயின்றுள்ளனர். சட்டவிரோதமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்வழி பயின்றதற்கான சான்றிதழ் பெற்று பலர் 20 விழுக்காடு தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றுள்ளார். எனவே, இந்த தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம்
உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், “500 நபர்களுக்கு வழங்கப்பட்ட போலி சான்றிதழ் தொடர்பாக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குற்றத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 3 நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் ” என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், “மாநில மொழிகளில் தொழில் துறை படிப்புகளை மாணவர்கள் பயில்வது மூலம் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே பணிபுரிய முடியும். ஆங்கிலத்தில் படிப்பதன் மூலமே உலகம் முழுவதும் சென்று வேலை செய்ய முடியும். எனவே மாநில மொழியில் தொழில்துறை சார்ந்த படிப்புகளை கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். 500 நபர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கிய வழக்கு தொடர்பில் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத்துறை காவல்துறையினரின் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் நாளை (டிச.16) சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க : 'இந்திய விவசாயிகளிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்' - கே.பாலகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.