ETV Bharat / city

மீனாட்சியம்மன் கோயில் காலண்டர் அச்சடிக்க மறு டெண்டர்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு - கோயில் நிர்வாகம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் 2022ஆம் ஆண்டுக்கான வண்ண காலண்டர் அச்சிடும் பணிக்கு மறு ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீனாட்சி கோயில்
மீனாட்சி கோயில்
author img

By

Published : Jul 30, 2021, 8:57 AM IST

மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பல வண்ணக் காலண்டர்கள் அச்சிடப்படுவது வழக்கம். காலண்டரில் மீனாட்சியம்மன், சுந்தரேசுவரரின் பல்வேறு கோலங்களுடன் உயர் ரக தாள்களில் படங்கள் அச்சிடப்படும். இதனால், மீனாட்சியம்மன் கோயில் வண்ணக் காலண்டருக்கு வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த வண்ணக் காலண்டர் பக்தர்களுக்கு 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பக்தர்களும் ஆர்வமுடன் இவற்றை வாங்கிச் செல்வர். கோயில் நன்கொடையாளர்கள், கோயிலுக்கு வருகை தரும் முக்கியப் பிரமுகர்களுக்கு பிரசாதத்துடன் வண்ணக் காலண்டரும் வழங்கப்படுவது வழக்கம். இதனால், ஆண்டுக்கு ஆண்டு காலண்டர் வாங்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மீண்டும் தொடங்கிய ஒப்பந்தம்

இந்நிலையில், கோயிலில் 2022ஆம் ஆண்டுக்கான வண்ணக் காலண்டர் அச்சிடும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கடந்த மாதம் கோரப்பட்டது. இதில், பல நிறுவனங்கள் பங்கேற்று ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கியிருந்தன. ஆனால், ஒப்பந்தப்புள்ளியில் நிறுவனங்கள் கோரியிருந்த தொகை மிகவும் அதிகமாக இருந்ததால் ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டது.

தற்போது, வண்ணக் காலண்டர் அச்சிடுவதற்கான ஒப்புந்தப்புள்ளி மீண்டும் கோரப்பட்டுள்ளது. இதன்படி நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். இதையடுத்து ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலண்டர் விலை உயர்வு

இதுதொடர்பாக அலுவலர்கள் கூறும்போது, “கோயில் சார்பில் அச்சிடப்படும் வண்ணக் காலண்டர் பக்தர்களுக்கு 100 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஆனால், அச்சு நிறுவனங்கள் அச்சிடும் தொகையை அதிகமாக குறிப்பிட்டிருந்தன. இதனால் காலண்டர் விலை கடுமையாக உயரும் நிலை இருந்ததால் காலண்டர் விலையை உயர்த்துவதைத் தடுக்கும் வகையில் மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: மீனாட்சி கோயில் யானை பார்வதிக்கு குளியல் தொட்டி: கோயில் நிர்வாகம் பரிசீலனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.