ETV Bharat / city

நிபந்தனைகளுடன் ரத யாத்திரை நடத்திக் கொள்ளலாம் - நீதிமன்றம் உத்தரவு - madurai court news

மதுரையில் 100 வார்டுகளிலும் நிபந்தனைகளுடன் ரத யாத்திரையை நடத்திக்கொள்ள அனுமதி வழங்க மதுரை மாநகர் காவல் ஆணையருக்கு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

madurai court news
madurai court news
author img

By

Published : Feb 19, 2021, 9:29 PM IST

மதுரை: ரத யாத்திரை அனுமதி குறித்து மதுரையைச் சேர்ந்த செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அனைவரிடமிருந்தும் பொருள் உதவி பெறும் நோக்கில் ரத யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் மதுரையில் 100 வார்டுகளில் அந்த வாகனத்தை ஒலிபெருக்கியுடன் இயக்க அனுமதி கோரி உதவி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தோம்.

கரோனா பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில், அதனை கருத்திற்கொண்டும், சட்ட ஒழுங்கு பிரச்னையை கருத்திற்கொண்டும் அனுமதி வழங்க இயலாது என மனுவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

கரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பல அரசியல் கட்சியினரின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சூழலில் ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏற்கத்தக்கதல்ல. இன்று (பிப் 19) இரவு 8 மணிமுதல் தொடங்கி தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு ரதயாத்திரை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே மதுரையில் ரத யாத்திரையை நடத்த அனுமதி மறுத்த திலகர்திடல் உதவி ஆணையரின் உத்தரவை ரத்து செய்து மதுரையில் ரத யாத்திரையை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படும் நிலையில் ரத யாத்திரைக்கு அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கதல்ல என வாதிடப்பட்டது.

"உதவி காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்று நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவதாக" காவல் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி, இன்று மாலைக்குள் மதுரையில் ரத யாத்திரையை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.