ETV Bharat / city

'வறுமையில்லாத நாட்டை உருவாக்க இதுதான் வழி' - பொருளியல் பேராசிரியர் ரங்கா ரெட்டியின் கருத்து - Ranga Reddy, Professor of Economics about Budget 2020

மதுரை: "இந்தியாவில் பொருளியல் சமத்துவம் நிலவ வேண்டுமாயின் சர்வதேச அடிப்படை ஊதிய மதிப்பான ரூ.10 ஆயிரத்தை ஏழ்மையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு இந்தியருக்கும், மத்திய அரசு வழங்க முன் வர வேண்டும். இதன் மூலம் மட்டுமே வறுமையில்லாத நாடாக இந்தியாவை மாற்ற முடியும்" என்று பொருளியல் பேராசிரியர் முனைவர் ரங்கா ரெட்டி தெரிவித்துள்ளார்.

பொருளியல் பேராசிரியர் ரங்கா ரெட்டி பேட்டி

author img

By

Published : Feb 4, 2020, 10:40 PM IST

Updated : Feb 4, 2020, 11:47 PM IST

திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை கௌரவப் பேராசிரியரும், இந்திய பொருளியல் கழகத்தின் துணைத்தலைவருமான ரங்கா ரெட்டி, மதுரையில் ஈடிவி பாரத் செய்தியாளருக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்துள்ள 2020ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் மக்கள் தொகை கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாடு, வறுமை ஒழிப்பு என மூன்று முக்கிய விடயங்களில் நிதியமைச்சர் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். இயற்கை மூலாதாரங்கள் பெருமளவு சுரண்டப்படுவதற்கான காரணியாக மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளதால் இதனைக் கட்டுப்படுத்துதல் வேண்டும். அதேப்போன்று சுற்றுச்சூழல் மேம்பாடு என்பது பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய தூண்டுகோலாக உள்ளது" என்று தெரிவித்தார்.

பொருளியல் பேராசிரியர் ரங்கா ரெட்டி பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்புகள் இருப்பது வரவேற்பிற்குரியது. சூரிய ஆற்றல் பயன்பாடு, எலக்ட்ரிக் வாகனங்கள் என அறிவிப்பு செய்துள்ளது வரவேற்புக்குரிய ஒன்றாகும். இதனால் மனித ஆயுள் கூடுவதற்கு வாய்ப்பு உருவாகும். இந்தியாவின் வளர்ச்சியை பின்னுக்கிழுக்கும் முக்கிய காரணியாக வறுமை உள்ளது. தேசத்தின் எந்தப் பகுதிகளுக்குச் சென்றாலும் பிச்சையெடுக்கும் நபர்களை சர்வசாதாரணமாக காணும் நிலையுள்ளது. வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற நபர்கள் குறித்து பொருளாதார வல்லுநர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறினாலும், சர்வதேச அடிப்படை ஊதிய அளவான ரூ.10 ஆயிரத்தை, ஏழ்மையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.

மேலும், "பசியால் வாடுபவர்களைக் கொண்ட இந்தியா, நிலவுக்கு விண்கலம் அனுப்புவது விந்தை என வெளிநாட்டார் நம்மை கேலி செய்வதை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நிலையை மாற்ற வேண்டும். இந்தியாவிலுள்ள மனித வளர்ச்சிக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக வறுமை உள்ளது. வறுமையை ஒழிப்பதற்கு தீட்டிய திட்டங்கள் அனைத்துமே தோல்வியைத் தழுவியுள்ளன. இது இந்தியாவின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கிறது" என்று வருத்தமடைந்தார்.

இந்த பேட்டியின்போது இந்திய பொருளியல் கழக செயற்குழு உறுப்பினரும், மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளியல் துறை தலைவருமான முனைவர் சி.முத்துராஜா உடனிருந்தார்.

இதையும் படிங்க:

வேலையிழப்பு குறித்து அரசிடம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை - பிரகாஷ் ஜவடேகர்

Last Updated : Feb 4, 2020, 11:47 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.