ETV Bharat / city

ராமேஸ்வரம் - பைஸாபாத் இடையே அதிவேக சிறப்பு ரயில் - மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு - அதிவேக சிறப்பு ரயில்

ராமேஸ்வரம் - பைஸாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி என தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரம் பைஸாபாத்
ராமேஸ்வரம் பைஸாபாத்
author img

By

Published : Jul 30, 2021, 6:46 AM IST

மதுரை: தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் ராமேஸ்வரம் - பைஸாபாத் ரயில் குறித்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், "வண்டி எண் 06793 ராமேஸ்வரம் - பைஸாபாத் வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் 19 முதல் மறுஅறிவிப்பு வரும் வரை ஞாயிற்றுகிழமைகளில் ராமேஸ்வரத்திலிருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 5.05 மணிக்கு பைஸாபாத் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண் 06794 பைஸாபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் 22 முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதன்கிழமைகளில் பைஸாபாத்திலிருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.

பாம்பன் பாலத்தில் மோதிய இழுவை கப்பல்

இந்த ரயில்கள் மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், சென்னை எழும்பூர், கூடூர், விஜயவாடா, வாரங்கல், பல்ஹார்ஷா, நாக்பூர், இட்டார்சி, ஜபல்பூர், சாட்னா, பிரயாக்ராஜ் (அலகாபாத்), ஜான்பூர், ஷாகன்ச், அயோத்தி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பைஸாபாத் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சந்திராபூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 3 குளிர்சாதன மூன்று அடுக்கு படத்திற்கு பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 பார்சல் வேனுடன் இணைந்த மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் இணைக்கப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.