ETV Bharat / city

சிஆர்பிஎஃப் வீரர் மாயமான வழக்கில் மத்திய அரசு மீண்டும் விசாரணை நடத்த உத்தரவு - ramanathapuram CRPF jawan

சத்தீஸ்கரில் காணாமல்போன சிஆர்பிஎஃப் வீரர் குறித்து மீண்டும் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ramanathapuram-crpf-jawan-missing-case-update

author img

By

Published : Mar 24, 2022, 9:11 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த வனிதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "எனது கணவர் பாலமுருகன் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரராக பணியாற்றிவந் நிலையில் அக்டோபர் 11ஆம் தேதி முதல் அவரை காணவில்லை. இரண்டு குழந்தைகளுடன் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். எனவே எனது கணவரை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பிலிருந்து, சத்தீஸ்கரில் காணாமல்போன சிஆர்பிஎஃப் வீரரின் செல்போன் ஐஎம்இஐ நம்பரை வைத்து இருப்பிடத்தை கண்டுபிடித்தோம். ஆனால், செல்போனை வைத்திருந்தவர் அதனை கீழே கிடந்து எடுத்ததாக தெரிவித்தார் என்று கூறப்பட்டது.

இதையடுத்து மனுதாரர் தரப்பிலிருந்து, பாலமுருகனின் வங்கி கணக்கு, ஏடிஎம் எண் உள்ளிட்ட பல விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை விசாரிக்கப்படாமல் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், சிஆர்பிஎஃப் வீரரை கண்டுபிடிப்பது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: பியூனோ, ஹெச்எம்மோ அனைவரும் சமம் தான் - மதுரைக்கிளை நீதிபதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.