மதுரை: கரோனா பரவலை தடுக்கும் வகையில் ரயில்வே காவல் துறை தலைவர் கல்பனா நாயக், துணை தலைவர் ஜெயகௌரி ஆகியோரின் உத்தரவின் பேரில் அனைத்து ரயில் நிலையங்களிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மதுரை இருப்பு பாதை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னுசாமி தலைமையில் ரயில்வே காவல் துறையினர், மதுரை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள், குழந்தைகளுக்கு சத்தான பழச்சாறு வழங்கி, கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பயணிகளுக்கு கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவற்றை வழங்கினர்.
அப்போது, கரோனா மூன்றாம் அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் போதிய விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும் என இருப்புப்பாதை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி