ETV Bharat / city

சித்திரை திருவிழாவை 'மிஸ் செய்யும்' அனைவருக்கும் இது சமர்ப்பணம் - அழகர் ஆற்றில் இறங்குதல்

ஏறக்குறைய 400 ஆண்டுகால வரலாற்றில் அழகரை காணாமல் முதல்முறையாக சித்திரை மாதத்தை கடக்கிறது மதுரை. இதற்கு பல்வேறு வகையிலும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் எழுந்துள்ளன. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு...

public-opinion-about-madurai-festival-cancelled

author img

By

Published : Apr 20, 2020, 9:00 PM IST

Updated : May 1, 2020, 4:09 PM IST

சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டுவது போல மதுரை விழாமலி மூதூர் என்பது மிக மிகப் பொருத்தம். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒரு திருவிழா என்று நாள்தோறும் விழாக்கள் களைகட்டும். உலகின் வரலாற்று சிறப்புமிக்க நகரம் தான் மதுரை. அதிலும் குறிப்பாக சித்திரை திருவிழா உலகத்தின் பார்வையை தன்னுள் திருப்பிய ஆகப்பெரும் விழாவாகும். மீனாட்சி திருக்கல்யாணமும் அதன் தொடர்ச்சியாக தேரோட்டமும் வைணவப் பெருந்தகை விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் மதுரையின் தவிர்க்க இயலாத தனிச்சிறப்புமிக்க அடையாளங்களாகும்.

தற்போது கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் கூடும் அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு மதுரை சித்திரைத் திருவிழாவும் விதிவிலக்காகுமா என்ன? மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் திருமலை மன்னருக்கு தனிச் சிறப்பான இடம் உண்டு. சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சித்திரைப் பெருவிழாவை அவர் பயன்படுத்திக் கொண்டார். சற்று ஏறக்குறைய 400 ஆண்டுகள் திருவிழா, மதுரை மண்ணோடு பின்னிப்பிணைந்து அதன் பண்பாடாகவே மாறிவிட்டது. சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டிருப்பது மதுரை மக்களிடம் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணக்கோலத்தில் சொக்கனும் சொக்கியும்
மணக்கோலத்தில் சொக்கனும் சொக்கியும்

இது குறித்து சேவாபாரதி தன்னார்வ உறுப்பினரான ராமச்சந்திரன் கூறுகையில், "மதுரை மக்கள் அனைவருக்கும் மற்றொரு குலதெய்வமாக இருப்பவர் கள்ளழகர். காலம் காலமாக நடைபெற்று வந்த இந்த நிகழ்வினை மீனாட்சி திருக்கல்யாணம் நடத்துவது போன்று நடத்த காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் முன்வரவேண்டும். ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையும் அதுதான். கள்ளழகர் மதுரை மண்ணில் கால் பதித்தால் அந்த ஆண்டு வளமும் குலம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு தமிழ்நாடு அரசு பாத்திரமாக திகழ வேண்டும்", என்றார்

400 ஆண்டு வரலாற்றில் அழகரை காணாமல் முதல் முறையாக முடங்கும் மதுரை - சிறப்பு தொகுப்பு

ஒருபுறம் பொதுமக்கள் எப்படி ஒரு எதிர்பார்ப்பை தங்களின் கோரிக்கையாக வைத்தாலும் கூட இன்னொருபுறம் அரசு ஏற்படுத்தியுள்ள இந்த தடையை இரு மனதோடு வரவேற்கிறார்கள். காரணம், மக்களிடம் கரோனா தொற்றிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை தான்.

இது குறித்து சமூக ஆர்வலர் அசோக் குமார் கூறுகையில், "சித்திரை திருவிழா இந்த ஆண்டு நடைபெறவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றம் தான் என்றாலும் பொதுமக்களின் நலன் கருதி அரசாங்கம் இந்த முடிவை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் உணர்ச்சிப்பெருக்கில் நடந்து கொள்வதை எந்தவித அதிகாரங்களாலும் ஒடுக்கிவிட முடியாது. ஆகையால் மக்கள் இன்றி இந்த விழாவை நடத்துவதும் சாத்தியமல்ல. அதன் பொருட்டு அரசு இந்த தடையை ஏற்படுத்தி இருக்கும் என எண்ணுகிறேன்", என்றார்.

கள்ளழகன் கால் பதித்தால் கட்டாந்தரையும் கழனி ஆகும் என்பது காலம்காலமாய் மக்களின் நம்பிக்கை. கண்ணுக்கே தெரியாத சின்னஞ்சிறு கிருமி உலகையெல்லாம் முடக்கியது போல் மாமதுரையையும் முடக்கி விட்டது. நாளைய மதுரையின் வரலாற்றில் கள்ளழகனோடு சொக்கன் சொக்கியோடு கரோனாவும் பதிவாகும்.

இதையும் படிங்க: வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்; விழாக்கோலம் கொண்ட மதுரை! - 2019

Last Updated : May 1, 2020, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.