குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் கடலூர் மாவட்டம் முதுநகரில் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வந்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், குடியுரிமை திருத்தச் சட்டத்தினை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என தெரிவித்தார்.
இதேபோன்று மதுரை மாவட்டம் பெருங்குடியில் உள்ள விமான நிலையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமுமுக மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க:
வீதி மீறல் : தரைமட்டமாக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்!