மதுரை தெப்பக்குளத்தில் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதை முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், "பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதில் 10 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் இந்த மத்திய நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது, 2022க்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டி தரப்படும், வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தி முடிக்கும் போது தண்ணீர் பிரச்னை இருக்காது.
இதனால் நிதிநிலை அறிக்கையை முழுமையாக படித்து புரிந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும் பேசி அவர், "திமுக இளைஞர் அணி செயலாளர் பதிவிக்கு வர அந்த கட்சியில் உள்ள ஒரு கோடி தொண்டர்களில் ஒருவருக்கு கூட அந்த அருகதை இல்லையா? இதற்கு முன்னாள் இருந்த இளைஞரணி தலைவரை ராஜினாமா செய்ய வைத்து விட்டு, தற்போது உதயநிதிக்கு பதவி வழங்க என்ன காரணம்? திமுக ஜனநாயக ரீதியில் செயல்படவில்லை சர்வாதிகார ஆட்சி புரிகிறது" என தெரிவித்தார்.