ETV Bharat / city

தெற்காசியாவின் சாக்ரடீசா தந்தை பெரியார்? - பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவு! - யுனெஸ்கோ விருது

மதுரை: தெற்காசியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் என யுனெஸ்கோ வழங்கியதாக தவறான தகவல்கள் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் இடம் பெற்றதை நீக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு பாட புத்தகக்குழு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

award
award
author img

By

Published : Feb 10, 2021, 1:23 PM IST

மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”கடந்த திமுக ஆட்சியின் போது போலியான, தவறான விவரங்களையெல்லாம் வரலாறு என்ற பெயரில் பள்ளி, கல்லூரி புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. 9 வகுப்பு மற்றும் கல்லூரி பாடப் புத்தகத்தில், தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று பெரியாருக்கு யுனெஸ்கோ பட்டம் கொடுத்ததாக தவறான தகவல் கூறப்பட்டுள்ளது. தெற்கு ஆசிய நாடுகள் பட்டியலில் நமது தேசம் இல்லை. மேலும் யுனெஸ்கோவின் முத்திரை போலியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விருதை 1970ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தவறான விசயங்களை கற்கும் போது தவறான புரிதலும் மற்றும் எதிர்காலமும் கேள்விக்குரியதாகிறது. ஆகையால் ஒன்பதாம் ஆண்டு சமச்சீர் பாடத்திட்டத்திலும், கல்லூரி பாடத்திட்டத்திலும் பெரியார் குறித்து உள்ள தவறான தகவல்களை நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி பாடப் புத்தகக்குழு பரிசீலித்து 12 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: இரண்டாவது நோட்டீசும் ரத்து! - உயர் நீதிமன்றம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.