ETV Bharat / city

மதுரை எய்ம்ஸ்க்கான பெரும் போராட்டத்துக்கு தயாராக வேண்டும்!

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவதற்கான போராட்டத்திற்கு மக்கள் தயாராக வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

mp
mp
author img

By

Published : Jan 27, 2021, 12:07 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றோடு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. வரும் ஆண்டாவது எய்ம்ஸ் பணிகள் தொடங்கப்படுமா என்ற கேள்வி இருக்கும் நிலையில், கடந்த வாரம் மத்திய அரசின் சுகாதாரத்துறைச் செயலாளரை சந்தித்துப் பேசினேன். ரூ.1,200 கோடி திட்டம் ரூ.2,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதற்கான முழு விளக்கத்தை அவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஜெய்க்கா நிறுவனத்தோடு மார்ச் இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் எனக் கூறியுள்ளனர். மத்திய அமைச்சரவை ரூ.2,000 கோடிக்கு ஒப்புதல் வழங்கினால்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

மதுரை எய்ம்ஸ்சோடு இணைந்து அறிவிக்கப்பட்ட ஜம்மு, மங்களகிரி உள்ளிட்ட எம்ய்ம்ஸ்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுவிட்டது. மருத்துவ மாணவர் சேர்க்கையைத் தொடங்க 300 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையையும், கட்டிடங்களையும் கொடுத்துப் பணிகளை விரைவுபடுத்த வேண்டிய பொறுப்புக்கொண்ட மாநில அரசு இதனைப்பற்றி துளியளவும் கண்டுகொள்வதில்லை. மதுரை எய்ம்ஸ் பணிகளுக்கான சிறப்பு அலுவலரை நியமிக்க தொடர்ந்து சொல்லியும் அதனை நிறைவேற்ற மறுக்கிறது.

கடந்த வாரம் டெல்லி சென்ற முதலமைச்சர், பிரதமரிடமோ, சுகாதாரத்துறை அமைச்சரிடமோ, நிதியமைச்சரிடமோ இதனைப்பற்றி ஒரு வார்த்தை பேசியதாகத் தெரியவில்லை. தமிழகத்துக்கு வர இருக்கிற முதல் எய்ம்ஸ், அதுவும் குறிப்பாக தென்தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரும்பலனைக் கொடுக்க உள்ள மிகப்பெரிய திட்டம் பற்றி மாநில முதலமைச்சருக்கு சிறிதாவது அக்கறை வேண்டாமா? எட்டுவழிச்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தக் காட்டிய வேகத்திலும் முனைப்பிலும் பத்தில் ஒரு பகுதியாவது மதுரை எய்ம்ஸ்க்குக் காட்டியிருந்தால் இந்நேரம் எய்ம்ஸ்கான பணி பலமடங்கு முன்னேறியிருக்கும்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எய்ம்ஸ் பிரச்சனையை முதன்மை பிரச்சனைகளில் ஒன்றாக எழுப்ப உள்ளோம். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலத்தில் நாம் கொடுக்கும் அழுத்தந்தான் இத்திட்டத்திற்கான மத்திய அமைச்சரவை ஒப்புதலைப் பெற்று, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வழிவகுக்கும். இந்தக் காலத்தை நாம் தவறவிட்டால் நெடுநாள் காத்திருக்க வேண்டிய நிலையிருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி விவசாயிகளை முதலமைச்சர் சந்திக்காதது ஏன்? - கார்த்தி சிதம்பரம் எம்.பி.,

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.