திருச்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். போட்டி நடக்க இருக்கும் இடம் கிராமத்தின் சந்தை பகுதியாகும்.
அப்பகுதி சாலையில் பேவர் பிளாக் பொருத்தப்பட்டுள்ளதால் போட்டியை அவற்றை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 20 லட்சம் ரூபாய்வரை செலவு ஏற்படும். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகள் பழமை வாய்ந்தவை. இதனால் போட்டியை காண பார்வையாளர்கள் அதிகம் கூடினால் சில வீடுகள் இடியும் அபாயம் உள்ளது.
இதனால் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்புடன் நடைபெற வாய்ப்பு இல்லை. இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே போட்டியினை திறந்தவெளியில் நடத்த அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரரின் மனுவை பரிசீலித்து 2 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பி.ஆர்.!