ETV Bharat / city

ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்கள் - 2ஆம் உலகப்போரின் மிகப் பெரும் அவலம்

author img

By

Published : Jan 22, 2020, 11:23 PM IST

இரண்டாம் உலகப்போரின்போது ரயில் பாதை அமைப்பதற்காக ஒன்றரை லட்சம் தமிழர்கள் ஜப்பானியர்களால் கொன்றொழிக்கப்பட்ட சம்பவம் இன்று வரை மறக்க முடியாத அவலமாக மலேசிய வாழ் தமிழர்கள் மனதில் இருந்து வருகிறது. அப்பேரவலம் குறித்த தொகுப்பு இதோ...

ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்கள்

ஹிட்லர் தலைமையிலான நாஜிப்படைகளும், பிரிட்டிசார் தலைமையிலான நேசநாட்டுப் படைகளும் மோதிக்கொண்ட இரண்டாம் உலகப்போர், இன்றளவும் பல்வேறு வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் சயாம்-பர்மா மரண ரயில் பாதை. இந்தியாவைக் கைப்பற்றுவதற்காக ஜப்பான் ராணுவம், இன்றைய தாய்லாந்திலிருந்து மியான்மர் வரை ரயில் பாதை ஒன்றை அமைக்க முடிவு செய்தது. அதனைக் குறுகிய காலத்திற்குள் அமைப்பது அதன் நோக்கம். இதன் காரணமாக 5 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணியை வெறும் 14 மாதங்களுக்குள் நிறைவு செய்தது.

இதற்காக போர்க்கைதிகளோடு மலேசியாவில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் உட்பட சற்றேறக்குறைய இரண்டரை லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த வேலையை விரைந்து செய்வதற்காக ஜப்பானியர்கள் செய்த கொடுமையின் காரணமாக ஒன்றரை லட்சம் தமிழர்கள் துடி துடிக்க மாண்டனர்.

மலேசியா எழுத்தாளர் சீ.அருண்
மலேசிய எழுத்தாளர் சீ.அருண்
இது குறித்து மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர் சீ.அருண் கூறுகையில், 'இந்த ரயில் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டவர்களில் ஒன்றரை லட்சம் பேர் தமிழர்கள். ஜப்பானிய ராணுவம் இழைத்த இந்தக் கொடுமை குறித்து இளைய தலைமுறையினர் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். இப்பணிக்காக சென்ற தமிழர்களில் 20 விழுக்காட்டினர் மீண்டும் மலேசியா திரும்பினர்' என்கிறார்.
சயாம்-பர்மா  ரயில் பாதை கட்டுமானப் பணியில் தமிழர்கள்

இந்தியாவைக் கைப்பற்ற நாஜிப்படைகள் மிகத் தீவிரமாக இருந்தன. அதன் காரணமாக சயாமிலிருந்து (இன்றைய தாய்லாந்து) பர்மா வரை (இன்றைய மியான்மர்) ஏறக்குறைய 416 கி.மீ. தூரத்திற்கு மரக்கட்டைகளால் ஆன ரயில் பாதை அமைக்கும் பணியை ஜப்பானியர்கள் மேற்கொண்டனர். ஒருபுறம் கொடிய காட்டு விலங்குகள், கொள்ளை நோய்கள், மறுபுறம் ஜப்பானியர்களின் கொடுமை என பல்வேறு வகையிலும் தமிழர்கள் தங்களது இன்னுயிரை இழந்தனர்.
மலாயாவில் ஜப்பானியர் இழைத்த கொடுமைகளுக்கு ஒரு சான்று

சயாம்-பர்மா மரண ரயில் பாதை என்ற சீ.அருணின் ஆவண நூலை வெளியிட்ட தமிழோசை பதிப்பகத்தின் நிறுவனர் விஜயகுமார் கூறுகையில், 'கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த மனிதப் பேரவலம். ஆனால், இக்கொடுமையான இழப்பிற்கு உரிய நீதியோ இழப்பீடோ தமிழர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. 2ஆம் உலகப்போர் முடிவுக்கு வந்தவுடன் இது தொடர்பான பல்வேறு ஆவணங்களை ஜப்பான் ராணுவம் எரித்துவிட்டது' என்றார்.
ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்கள் - சிறப்பு தொகுப்பு
அண்மையில் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக நடைபெற்ற 'மறக்கப்பட்ட வரலாற்றின் மறு உயிர்ப்பு' என்ற தலைப்பிலான கருத்தரங்கில், இப்படுகொலை குறித்து சீ.அருண் உரையாற்றியபோது, அரங்கம் மொத்தமும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. மலேசிய எழுத்தாளர் அருண் இதனை இனப்படுகொலை என்றே வர்ணித்தார். உலகின் மூத்த குடிகளுள் ஒன்றான தமிழினத்திற்கு தொடர்ந்து நேர்ந்து வருகின்ற கொடுமைகளுள் 78 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இக்கொடுந்துயரம், அடுத்து வரும் தலைமுறைக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் தமிழினம் கடந்து வந்த வரலாற்றுத் தழும்புகள், அடுத்த தலைமுறையினரை உணர்வெழுச்சியோடு இயங்கச் செய்யும்.

இதையும் படிங்க:

பிரபாகரன் - விடுதலைக்காக ஏங்கும் மனிதர்களின் அடையாளம்...!

Intro:ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்கள் - 2-ஆம் உலகப்போரின் மிகப் பெரும் அவலம்

இரண்டாம் உலகப்போரின்போது ரயில் பாதை அமைப்பதற்காக ஒன்றரை லட்சம் தமிழர்கள் ஜப்பானியர்களால் கொன்றொழிக்கப்பட்ட சம்பவம் இன்று வரை மறக்க முடியாத அவலமாக மலேசிய வாழ் தமிழர்களுக்கு இருந்து வருகிறது. அப்பேரவலம் குறித்த ஓர் அனுபவத் தொகுப்பு இது.
Body:ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்கள் - 2-ஆம் உலகப்போரின் மிகப் பெரும் அவலம்

இரண்டாம் உலகப்போரின்போது ரயில் பாதை அமைப்பதற்காக ஒன்றரை லட்சம் தமிழர்கள் ஜப்பானியர்களால் கொன்றொழிக்கப்பட்ட சம்பவம் இன்று வரை மறக்க முடியாத அவலமாக மலேசிய வாழ் தமிழர்களுக்கு இருந்து வருகிறது. அப்பேரவலம் குறித்த ஓர் அனுபவத் தொகுப்பு இது.

ஹிட்லர் தலைமையிலான நாஜிப்படைகளும், பிரிட்டிசார் தலைமையிலான நேசநாட்டுப் படைகளும் மோதிக்கொண்ட இரண்டாம் உலகப்போர், இன்றளவும் பல்வேறு வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் சயாம்-பர்மா மரண ரயில் பாதை.

இந்தியாவைக் கைப்பற்றுவதற்காக ஜப்பான் ராணுவம், இன்றைய தாய்லாந்திலிருந்து மியான்மர் வரை ரயில் பாதை ஒன்றை அமைக்க முடிவு செய்தது. அதனைக் குறுகிய காலத்திற்குள் அமைப்பது அதன் நோக்கம். இதன் காரணமாக 5 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணியை வெறும் 14 மாதங்களுக்குள் நிறைவு செய்தது.

இதற்காக போர்க்கைதிகளோடு மலேசியாவில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் உட்பட சற்றேறக்குறைய இரண்டரை லட்சம்பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த வேலையை விரைந்து செய்வதற்காக ஜப்பானியர்கள் செய்த கொடுமையின் காரணமாக ஒன்றரை லட்சம் தமிழர்கள் துடி துடிக்க மாண்டனர்.

இது குறித்து மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர் சீ.அருண் கூறுகையில், 'இந்த ரயில் பணிக்கான ஈடுபடுத்தப்பட்டவர்கள் ஒன்றரை லட்சம் பேர் தமிழர்கள். ஜப்பானிய ராணுவம் இழைத்த இந்தக் கொடுமை குறித்து இளைய தலைமுறையினர் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். இப்பணிக்காக சென்ற தமிழர்களில் 20 சதவிகிதத்தினரே மீண்டும் மலேசியா திரும்பினர்' என்கிறார்.

இந்தியாவைக் கைப்பற்ற நாஜிப்படைகள் மிகத் தீவிரமாக இருந்தன. அதன் காரணமாக சயாமிலிருந்து (இன்றைய தாய்லாந்து) பர்மா வரை (இன்றைய மியான்மர்) ஏறக்குறைய 416 கி.மீ. தூரத்திற்கு மரக்கட்டைகளால் ஆன ரயில் பாதை அமைக்கும் பணியை ஜப்பானியர்கள் மேற்கொண்டனர். ஒருபுறமும் கொடிய காட்டு விலங்குகள், கொள்ளை நோய்கள் மறுபுறம் ஜப்பானியர்களின் கொடுமை என பல்வேறு வகையிலும் தமிழர்கள் தங்களது இன்னுயிரை இழந்தனர்.

சயாம்-பர்மா மரண ரயில் பாதை என்ற சீ.அருணின் ஆவண நூலை வெளியிட்ட தமிழோசை பதிப்பகத்தின் நிறுவனர் விஜயகுமார் கூறுகையில், 'கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த மனிதப் பேரவலம். ஆனால், இக்கொடுமையான இழப்பிற்கு உரிய நீதியோ இழப்பீடோ தமிழர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. 2-ஆம் உலகப்போர் முடிவுக்கு வந்தவுடன் இது தொடர்பான பல்வேறு ஆவணங்களை ஜப்பான் ராணுவம் எரித்துவிட்டது' என்றார்.

அண்மையில் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக நடைபெற்ற 'மறக்கப்பட்ட வரலாற்றின் மறு உயிர்ப்பு' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் இப்படுகொலை குறித்து சீ.அருண் உரையாற்றியபோது, அரங்கம் மொத்தமும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. மலேசிய எழுத்தாளர் அருண் இதனை இனப்படுகொலை என்றே வர்ணித்தார்.

உலகின் மூத்த குடிகளுள் ஒன்றான தமிழினத்திற்கு தொடர்ந்து நேர்ந்து வருகின்ற கொடுமைகளுள் 78 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இக்கொடுந் துயரம் அடுத்து வரும் தலைமுறைக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் தமிழினம் கடந்து வந்த வரலாற்றுத் தழும்புகள், அடுத்த தலைமுறையினரை உணர்வெழுச்சியோடு இயங்கச் செய்யும்.

ஈடிவி பாரத் செய்திகளுக்காக மதுரையிலிருந்து செய்தியாளர் இரா.சிவக்குமார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.