ETV Bharat / city

'தமிழ் உணர்வை யாராலும் நசுக்க இயலாது' - காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி - அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா

மதுரை: தமிழ் உணர்வை யாராலும் நசுக்க இயலாது என அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை கண்டுகளித்த பிறகு, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி சூளுரைத்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
author img

By

Published : Jan 14, 2021, 5:52 PM IST

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று (ஜனவரி 14) ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதன் பிறகு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் ஜல்லிக்கட்டை ஏன் ஊக்குவிக்கிறார்கள் என்பதை தான் அறிந்து கொண்டதாகவும், ஜல்லிக்கட்டு விளையாட்டின் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக சிலர் கூறுவது முற்றிலும் தவறு என்றார். தமிழ் மக்களின் உணர்வுகளையும், மொழியையும் யாராலும் நசுக்க முடியாது என்று சூளுரைத்த ராகுல் காந்தி, ஜல்லிக்கட்டில் பங்கேற்ற இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ராகுல் காந்தி

விவசாயிகளை அழிக்க மத்திய முயற்சி செய்வதாகவும், அவர்களை நசுக்கி, வளம் பெறலாம் என எண்ணினால் வரலாற்றை சற்று திரும்பி பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, தொழிலதிபர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் ஊடுருவிய நிலையில், மத்திய அரசு அமைதி காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.