மதுரையில் இன்று (ஜூலை25) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “கரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகள் முழு மனநிறைவோடு மருத்துவம் பார்த்து நலம் பெற்றுச் செல்கின்றனர். மதுரையைப் பொறுத்தவரை காய்ச்சல் கண்டறியும் குழுக்கள் மூலமாக ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 468 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது மதுரையில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. அதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மதுரையில் மட்டுமே பிளாஸ்மா தானம் தருவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 444 மரணங்கள் நாள்பட்ட பிற நோய்கள் காரணமாக நிகழ்ந்துள்ளன. அந்த மரணங்களுக்குப் பிறகே அவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரியவந்தது. ஆகையால் அந்த மரணங்களும் கரோனா தொற்று என்று அறிவிக்கப்பட்டன. மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை. இவை அனைத்துமே உலகச் சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படியே நடைபெற்றுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க... க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்ய வேண்டும் - ஸ்டாலின்