துபாயில் ஐஎஸ் அமைப்போடு தொடர்புடைய தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 14 பேரை, புலனாய்வு அலுவலர்கள் அண்மையில் கைது செய்தனர். பின் அவர்களிடம் பெறப்பட்ட தகவலை வைத்து, கோவையைச் சேர்ந்த ஹாசிம் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
அதன் பிறகு அவர் மதுரையில் உள்ள தன் கூட்டாளிகளைத் தொடர்புகொண்டு தகவல் பரிமாற்றம் செய்துள்ளார், அதனை அவரின் செல்போன் மூலம் புலனாய்வு அலுவலர்கள் கண்டறிந்து அதன் அடிப்படையில், இன்று மதுரையில் நெல்பேட்டை, வில்லாபுரம், சொக்கிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஐஎஸ் பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.