புதுக்கோட்டை மாவட்டம் முள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எங்கள் ஊரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அதற்கான விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதியும் பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவித்ததால், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கிறது. நாளை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டு போட்டியை விதிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.
இதையும் படிங்க: பதிவு எண் இல்லாத பேட்டரி ஆட்டோ! அரசு பதிலளிக்க ஆணை!