முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்ப்ட்டு கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வலியுறுத்தி, மதுரை மத்திய சிறைச்சாலை முன்பாக, சமூக செயற்பட்டாளர் முகிலன் தலைமையில் ஏழு புறாக்களை பறக்கவிட்டு நூதன போராட்டம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். ஆனால் கைதாக மறுத்து முகிலன் உள்ளிட்டோர் சிறைச்சாலை முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே முகிலனை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: கோயில் சிலைகள் மாயமாகும் விவகாரம்: இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு