மதுரை விமானநிலையத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
கேள்வி: அகமதாபாத்தில் குடிசையை மறைப்பதற்காக ஏழு அடி சுவர் எழுப்பியதற்கு காரணம் என்ன?
பதில்: அமெரிக்காவின் அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது பெருமைக்குரிய விஷயம். நம்முடைய இந்தியாவின் வளர்ச்சிக்காக இரு நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அதற்காக வரவேற்பு கொடுக்கும் பொருட்டே அவ்வாறு செய்யப்பட்டது.
கேள்வி: என்பிஆர் குறித்து முதலமைச்சர் அனுப்பியுள்ள கடிதம் பற்றி பாராளுமன்றத்தில் பேசப்படுமா?
பதில்: முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து பாராளுமன்ற கூட்டத்தில் பேசுவேன்.
கேள்வி: ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்கப்பட்டதை, ஸ்டாலின் விமர்சனம் செய்தது?
பதில்: பெண் குழந்தைகளுக்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்டது தான் தொட்டில் குழந்தை திட்டம். அந்த திட்டத்திற்காக அன்னை தெரசாவால் ஜெயலலிதா பாராட்டுப் பெற்றார். ஸ்டாலினுக்கு மனோவியாதி என்று நினைக்கின்றேன். அவர் எதற்கெடுத்தாலும் குறை சொல்கின்றார் என்று கூறினார்.
இதையும் படிங்க: