மதுரை: தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப். 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று (பிப். 22) நடைபெற்றது.
சென்னை உள்பட 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது மட்டுமல்லாமல் நகராட்சி, பேரூராட்சிகளிலும் பெரும்பாலன இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வென்றுள்ளன. அதேவேளை, பல இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் இந்த தேர்தலில் வெற்றிக் கனியைப் பறித்துள்ளனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளின் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், அங்குள்ள இரு வார்டுகளில் சுயேச்சையாக போட்டியிட்ட தாய், மகன் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.
தாயார் வள்ளிமயில் 13ஆவது வார்டிலும், அவரது மகன் மருதுபாண்டி 8ஆவது வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுயேச்சையாக நின்ற மு.க. அழகிரி ஆதரவாளர் வெற்றி: திமுகவினர் அதிர்ச்சி