மதுரை: உலகப் புகழ் வாய்ந்த மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த விழா கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.
கோயிலில் நடைபெற்று வரும் ஆவணி மூல உற்சவத்தின் ஒன்பதாம் திருவிழாவான நேற்று (ஆக.19) காலை 8 மணிக்கு கோயில் வளாகத்திற்குள்ளேயே சாமி புறப்பாடு செய்யப்பட்டு, நான்கு ஆடி வீதிகளில் புறப்பாடு நடைபெற்று பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
பிட்டுக்கு மண் சுமந்த வரலாறு மூன்று நாள்கள் அனுமதி இல்லை
ஆவணி மூல உற்சவம்: பக்தர்கள் இன்றி நடைபெற்ற பிட்டு திருவிழா! ’பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ நேற்று பிற்பகல் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கோயிலின் பாரம்பரிய பழக்க வழக்கப்படி முற்பகல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. எனவே, நேற்று மாலை 4 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டுதல் உத்தரவுபடி ஆகஸ்ட் 20, 21, 22 ஆகிய மூன்று நாள்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.ஆவணி மூல உற்சவம்: பக்தர்கள் இன்றி நடைபெற்ற பிட்டு திருவிழா! இதையும் படிங்க: மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு