மதுரை: மேலச்சித்திரை வீதியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தங்கும் விடுதியில் ஓதுவார் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த ஏழு மாதங்களாக அங்கு தங்கி ஓதுவாராக பயிற்சிப் பெற்று வரும் முதலாம் ஆண்டு மாணவர் ஜெயராமன் (16) மீது விடுதியின் மேற்கூரை நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதில் அம்மாணவர் பலத்த காயமடைந்தார்.
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு, அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்தப் பயிற்சி, பள்ளியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஓதுவார் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், மேற்கூரை இடிந்து சக மாணவர் காயமடைந்ததால் பிற மாணவர்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். வேறு அசம்பாவிதம் நடைபெறாமல் கோயில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து திரும்பிய 21 தமிழ்நாட்டு மாணவர்கள்!