மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவிலுள்ள பூலாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. செல்வம். இவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து, கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி ஓய்வுபெற்றார். இவர் 12 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர்.
தற்போது சொந்த கிராமத்தில் விவசாயம் செய்துவருகிறார். இந்நிலையில், ஏ. செல்வம், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.
அதில், "எனது ஓய்வுக்குப் பிறகு சொந்த கிராமமான பூலாங்குறிச்சியில் வேளாண் பணிகளில் ஈடுபட்டுவருகிறேன். எங்கள் கிராமத்தில் உருமான் சாமி கோயில் உள்ளது.
கோயில் நிலத்தில் தார்ச்சாலை
இந்தக் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அறநிலையத் துறையிடம் அனுமதி பெறாமல் 225 அடி தூரத்திற்குத் தார்ச்சாலை அமைத்துள்ளனர். இந்தத் தார்ச்சாலையை அகற்ற உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “உருமன் கோயில் இடத்தில் சாலை அமைத்துள்ளனர். இதற்கு அறநிலையத் துறையிடமிருந்து எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை. இதனை அலுவலர்கள் ஆய்வுசெய்து உறுதிசெய்துள்ளனர்.
எனவே கோயில் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலையை 30 நாள்களில் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வாகன நுழைவு வரி விவகாரத்தில் பிடியாணை உத்தரவு ரத்து - உயர் நீதிமன்றம்