மதுரையை சேர்ந்த லேடிஸ் எட்டாவது சர்கோல் இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பாக, பார்வையற்றவர்களுக்கான கார் ஓட்டும் பேரணி நடைபெற்றது. ஒரு தனியார் ஓட்டலில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் நடைபெற்ற இந்தப் பேரணியில், பிரெய்லி முறையில் 30 கிலோ மீட்டருக்கு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு, பார்வையற்றவர்கள் வழித்தடங்களை வழி சொல்லும் வகையிலும், அருகே ஓட்டுநர்கள் அமர்ந்து ஓட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விழிப்புணர்வு பேரணி முலம், நிதி திரட்டி ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கும், அரசு பள்ளிகளுக்கும் தேவையான கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.
இதில் 40க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்களும், 40க்கும் அதிகமான ஓட்டுநர்களும் பங்கேற்றனர். தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் விடுதி அருகே தொடங்கிய இந்தப் பேரணி, கோரிப்பாளையம் சிம்மக்கல் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றி மீண்டும் தனியார் விடுதிக்கு வந்தடைந்தது.
இதையும் படிக்க:திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா
.