திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "விஜயநாராயணம் பெரியகுளம் தென் தமிழ்நாட்டில் மிகப்பெரிய குளமாக இருந்துவருகிறது. மணிமுத்தாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலமாக விஜயநாராயணம் பெரியகுளம் கண்மாய் நிரம்புகிறது.
மணிமுத்தாறு அணை 2020 டிசம்பர் 1ஆம் தேதி அரசாணையின்படி 120 நாள்கள் தண்ணீர் திறக்க வேண்டும். இந்நிலையில் ஜனவரி 5 முதல் 14 வரை 10 நாள்கள் மணிமுத்தாறு தடுப்பணையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகத் தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே, கூடுதலாக 10 நாள்கள் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு இது குறித்து, நெல்லை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மத்திய அரசுடன் இணக்கம் ஏன்? - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்