சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மரம் செடிகளைப் பாதுகாக்கவும் அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்காக பல்வேறு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் மரங்களை நட்டுப் பராமரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அனைத்து வகையிலும் பயனளிக்கும் பனை மரங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மக்கள் நீதி மய்யத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் நீதி மய்யமும். மதுரை கல்லூரி மாணவ மாணவிகளும் இணைந்து, திருப்பரங்குன்றம் அடுத்த தணக்கன்குளத்தில் உள்ள கண்மாய் கரை உட்பட அனைத்து பொது இடங்களிலும் உள்ள கருவேலமரங்களை அகற்றி, 3000க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.