மதுரை: இந்தியாவின் பண்பாட்டு பாரம்பரிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் எளிதாக சுற்றிப் பார்த்து வர இந்திய ரயில்வே "பாரத் கௌரவ் ரயில்கள்" திட்டத்தை கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதியன்று தொடங்கியது. இந்தத் திட்டத்திற்காக 8 பயண சேவையாளர்கள் தெற்கு ரயில்வேயில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனர்.
அதில் முதற்கட்டமாக கோயம்புத்தூர் - சீரடி பாரத் கௌரவ் ரயில் சேவை ஜூன் 14 முதல் தொடங்குகிறது. தற்போது இரண்டாவது கட்டமாக மதுரை - வாரணாசி பாரத் கௌரவ் ரயில் சேவை ஜூலை 23, 2022 அன்று தொடங்க உள்ளது. இந்த 12 நாள் சுற்றுலா ரயில் மதுரையில் இருந்து புறப்பட்டு பூரி, கொல்கத்தா, கயா, வாரணாசி வழியாக பிரயாக்ராஜ் சங்கம் சென்று மறுமார்க்கத்தில் விஜயவாடா, சென்னை வழியாக மதுரை வந்து சேர இருக்கிறது. இந்த ரயிலுக்காக பயண சேவையாளர் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தனது விருப்பத்தை பதிவு செய்துள்ளார்.
பயண சேவையாளர் கடந்த ஜூன் 9 அன்று 6 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் ஒரு சமையல் பெட்டி, 2 இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டிகள் தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்துள்ளார். அதற்காக ரயில் பதிவு கட்டணம் ரூபாய் ஒரு கோடி செலுத்தி பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: 'பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன்' - ஓ.பன்னீர்செல்வம்