ETV Bharat / city

துப்பாக்கிச் சுடுதலில் தேசிய பதக்கம் - மதுரை மாணவர் சாம் ஜார்ஜ் சாதனை

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொடர்பியல் துறை மாணவர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச சாம்பியனாவதே தனது லட்சியம் எனக் கூறும் சாம் ஜார்ஜ் சஜன் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதலில் மதுரை மாணவர் சாதனை

author img

By

Published : Dec 29, 2019, 12:51 PM IST

பதக்கங்களாலும் கோப்பைகளாலும் தன் வீட்டையே நிறைத்துள்ளார் மாணவர் சாம் ஜார்ஜ் சஜன். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் ஏற்பட்டு, அதற்காக தொடர் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். சாம் ஜார்ஜ்ஜின் தந்தை கிறிஸ்டோபர் ரமேஷ் மேலூரிலுள்ள அரசுக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் என்சிசி ஆசிரியராகவும் இருக்கின்ற காரணத்தால், சாம் ஜார்ஜுக்கும் அந்தப் பயிற்சியைக் கொடுத்துள்ளார்.

தன்னுடைய துப்பாக்கி சுடும் ஆர்வத்திற்கு பெரும் ஊக்கமாகத் திகழ்ந்தது தனது தந்தையார்தான் எனக் கூறும் சாம், தற்போது மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தொடர்பியல் துறையில் பயின்று வருகிறார். அண்மையில் போபாலில் நடைபெற்ற 63ஆவது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 50 மீட்டர் தூர துப்பாக்கிச் சுடுதலில் தனி நபர் பிரிவில் பங்கேற்ற இவர் வெள்ளியும், தமிழ்நாடு அணியின் சார்பாக வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

துப்பாக்கி சுடுதலில் தேசிய பதக்கம் - மதுரை மாணவர் சாம் ஜார்ஜ் சாதனை
பதக்கம் வென்ற சாம் ஜார்ஜ்

நமது ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், 'மதுரை ரைஃபிள் கிளப் மூலமாக கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்துதான் துப்பாக்கிச் சுடுதலில் ஆர்வம் கொண்டு இறங்கினேன். பொழுது போக்கு நிமித்தமாகவே இதில் ஆர்வம் காட்டினேன். சொந்தமாக என்னிடம் துப்பாக்கி இல்லாமல் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். தங்கப் பதக்கங்கள் வென்றதுடன் மண்டல அளவிலும் சாதனை புரிந்தேன். கடந்த 2017ஆம் ஆண்டு தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன்' என்கிறார்.

துப்பாக்கிச் சுடுதலில் தேசிய பதக்கம் வென்ற மதுரை மாணவர் - சிறப்பு தொகுப்பு

தனக்கென்று சொந்தமாய் துப்பாக்கியை பல்வேறு போராட்டங்களுக்கிடையே பெற்று தொடர் பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியதாகவும், இதன் காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்றதாகவும் பெருமையோடு கூறுகிறார் சாம் ஜார்ஜ். அதே ஆண்டில் ஜெர்மனியிலும், செக் குடியரசிலும், தென் கொரியாவிலும் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பங்கேற்று தென்கொரியாவில் நடைபெற்ற போட்டிகளில் நான்கு தங்கமும், நான்கு வெள்ளியும் வென்றதாகவும் கூறும் இவரின் முகத்தில் அந்த வெற்றியை அடைய முயற்சித்த ஆர்வமும் வெளிப்படுகிறது.

துப்பாக்கி சுடுதலில் தேசிய பதக்கம் - மதுரை மாணவர் சாம் ஜார்ஜ் சாதனை
துப்பாக்கிச் சுடுதலில் தேசிய பதக்கம் - மதுரை மாணவர் சாம் ஜார்ஜ் சாதனை

தொடர்ந்து சாம் ஜார்ஜ் கூறுகையில், "இந்தப் போட்டியிலிருந்து அனைத்து இந்திய மாநிலங்களும் தங்களின் இரண்டிரண்டு அணிகளுடன் பங்கேற்றன. ஏறக்குறைய 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். என்னுடைய பிரிவில் மட்டும் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தன்னுடைய இந்த வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக மதுரை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் வேல்சங்கர் தான்" என்றார்.

மேலும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கச் செல்லும்போது, மத்திய அரசு அதற்குரிய முழு செலவுகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதைப் போன்று, தேசிய அளவிலான போட்டிகளுக்குச் செல்லும் போது தமிழக அரசு நிதி உதவி செய்ய வேண்டும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் ரைஃபிள் கிளப்களை ஊக்குவிக்க வேண்டும் என்கிறார் சாம் ஜார்ஜ். வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதுடன், அடுத்த இலக்காக சர்வதேச சாம்பியனாக உருவெடுக்க வேண்டும் என்பதையும் தனது நோக்கமாகக் கொண்டு தீவிரப் பயிற்சியில் அக்கறை காட்டி வருகிறார்.

இதையும் படிங்க:

இந்த ஆட்டோ வீட்டுல இப்பவே குடியேறணும்னு இருக்கே!

Intro:துப்பாக்கி சுடுதலில் தேசிய பதக்கம் - மதுரை மாணவர் சாம் ஜார்ஜ் சாதனை

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொடர்பியல் துறை மாணவர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச சாம்பியனாவதே தனது லட்சியம் எனக் கூறும் சாம் ஜார்ஜ் சஜன் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.Body:துப்பாக்கி சுடுதலில் தேசிய பதக்கம் - மதுரை மாணவர் சாம் ஜார்ஜ் சாதனை

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொடர்பியல் துறை மாணவர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச சாம்பியனாவதே தனது லட்சியம் எனக் கூறும் சாம் ஜார்ஜ் சஜன் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.

பதக்கங்களாலும் கோப்பைகளாலும் தன் வீட்டையே நிறைத்துள்ளார் இந்த மாணவர். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் ஏற்பட்டு, அதற்காக தொடர் பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்குகிறார்.

சாம் ஜார்ஜ்ஜின் தந்தை கிறிஸ்டோபர் ரமேஷ் மேலூரிலுள்ள அரசு கல்லூரியில் ஆங்கில இலக்கியத்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். என்சிசி வாத்தியாராகவும் இருக்கின்ற காரணத்தால், சாம் ஜார்ஜ்க்கும் அந்தப் பயிற்சியை அளிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.

தன்னுடைய துப்பாக்கி சுடும் ஆர்வத்திற்கு பெரும் ஊக்கமாகத் திகழ்ந்தது தனது தந்தையார்தான் எனக் கூறும் சாம், தற்போது மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி. தொடர்பியல் துறையில் முதலாமாண்டு பயில்கிறார்.

அண்மையில் போபாலில் நடைபெற்ற 63-ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் போட்டியில் பங்கேற்று மூன்று நிலை 50 மீட்டர் தூர துப்பாக்கி சுடுதலில் தனி நபர் பிரிவில் வெள்ளியும், தமிழ்நாடு அணியின் சார்பாக வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

நமது ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், 'மதுரை ரைஃபிள் கிளப் மூலமாக கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்துதான் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் கொண்டு இறங்கினேன். பொழுது போக்கு நிமித்தமாகவே இதில் ஆர்வம் காட்டினேன்.

சொந்தமாக என்னிடம் துப்பாக்கி இல்லாமல் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் துவங்கினேன். தங்கப்பதக்கங்கள் வென்றதுடன் மண்டல அளவிலும் சாதனை புரிந்தேன். கடந்த 2017-ஆம் ஆண்டு தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன்' என்கிறார்.

தனக்கென்று சொந்தமாய் துப்பாக்கியை பல்வேறு போராட்டங்களுக்கிடையே பெற்று தொடர் பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியதாகவும், இதன் காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றதாகவும் பெருமையோடு கூறுகிறார்.

மேலும் சாம் ஜார்ஜ் கூறுகையில், 'அதே ஆண்டில் ஜெர்மனியிலும், செக் குடியரசிலும், தென் கொரியாவிலும் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பங்கேற்றேன். தென்கொரியாவில் நடைபெற்ற போட்டிகளில் நான்கு தங்கமும், நான்கு வெள்ளியும் வென்றேன். இவற்றில் மூன்று தனிநபர் போட்டிகளில் நான் வென்றதாகும்' என்கிறார்.

போபாலில் நடைபெற்ற 63-ஆவது தேசியப் போட்டியில் பங்கேற்று இதுவரை பெறாத தனிப்பட்ட மிகச் சிறந்த புள்ளிகளை இங்கு பெற்றது தன்னுடைய சாதனை என்கிறார் சாம் ஜார்ஜ் சஜன்.

மேலும் சாம் ஜார்ஜ் கூறுகையில், 'இந்தப் போட்டியிலிருந்து அனைத்து இந்திய மாநிலங்களும் தங்களின் இரண்டிரண்டு அணிகளுடன் பங்கேற்றன. ஏறக்குறைய 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். என்னுடைய பிரிவில் மட்டும் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்' என்கிறார். தன்னுடைய வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக மதுரை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் வேல்சங்கரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கச் செல்லும்போது, மத்திய அரசு அதற்குரிய முழு செலவுகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதைப் போன்று, தேசிய அளவிலான போட்டிகளுக்குச் செல்லும் போது தமிழக அரசு நிதி உதவி செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் ரைஃபிள் கிளப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்கிறார் சாம் ஜார்ஜ்.

வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கும் பெருமை சேர்ப்பதுடன், அடுத்த இலக்காக சர்வதேச சாம்பியனாக உருவெடுக்க வேண்டும் என்பதையும் தனது நோக்கமாகக் கொண்டு தீவிரப் பயிற்சியில் அக்கறை காட்டி வருகிறார்.

இனி வருங்காலங்களில் இந்தியா ஒலிம்பிக்கில், குறிப்பாக துப்பாக்கி சுடுதலில் ஒரு இளம் வீரரை கொண்டிருப்பதுடன் பதக்கப்பட்டியலில் கூடுதலாக தங்கங்களைப் பெறுவதற்கு சாம் ஜார்ஜ் நிச்சயம் உத்தரவாதம் அளிப்பார் என நம்பலாம்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.