மதுரை: அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பாக நேற்று (பிப். 19) வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல், "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடத்தப்படும். இலவச கரோனா தடுப்பூசி மையத்தில் (மதுரை மருத்துவக் கல்லுாரி வளாகம்) 2021 ஜனவரி 16ஆம் தேதி முதல் 2022 பிப்ரவரி 19 வரை 2 லட்சத்து 200 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் (24 மணிநேரமும்) செயல்படும் தனி தடுப்பூசி மையங்களில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, மருத்துவமனை தடுப்பூசி மையங்களில் மாநிலத்திலேயே முன்னிலை வகிக்கிறது.
24 மணி நேரமும் செயல்படும் இம்மையத்தின் மூலம் ஒரு லட்சத்து எட்டாயிரத்து நான்கு பயனாளிகளுக்கு முதல் தவணையும், 86 ஆயிரத்து 578 பயனாளிகளுக்கு இரண்டாம் தவணையும், 5 ஆயிரத்து 382 பயனாளிகளுக்கு மூன்றாம் தவணையும், 15 முதல் 17 வயதினருக்கான தடுப்பூசி 1,140 பயனாளிகளுக்கும் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.