மதுரையில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனைகளில் அதிக நோயாளிகள் தற்போது சிகிச்சைக்காக வரத் தொடங்கியுள்ளனர்.
மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு உதவும் வகையில் மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தனது ரயில்வே மருத்துவமனையை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கியுள்ளது.இதற்காக பல படுக்கைகள் கொண்ட மருத்துவப் பிரிவு தனித்தனி சிறு அறைகளாக மாற்றப்பட்டுள்ளன.
ஆக்ஸிஜன் வழங்கல், தொடர்பு வசதி, காற்றோட்ட வசதி, அலைபேசி மின்னூட்ட வசதி, இசை மற்றும் பொது அறிவிப்புகள் ஒலிபரப்புக் கருவி, ஜன்னல்களில் உயர்ரக கொசு வலைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மேம்படுத்தப்பட்ட வசதி ரயில்வே ஊழியர்களுக்கான பொது மருத்துவ வசதிகள் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளோடு செய்யப்பட்டுள்ளன என்று தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.