மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டதுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. நேற்று, பெசன்ட் நகரில் இச்சட்டத்துக்கு எதிராக கோலமிட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், திமுக சார்பாக நாடு முழுவதும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெண்கள் தங்களுடைய எதிர்ப்புகளை கோலம் மூலம் காட்ட வேண்டும் என்று அறிவித்திருந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, மதுரை கடச்சநேந்தல் பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் வீட்டு வாசலில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் கோலங்களிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வேட்டை தடுப்பு காவலர்கள் ஊதியத்தில் முறைகேடு - தலைமை வனப்பாதுகாவலர் திடீர் ஆய்வு!