ETV Bharat / city

நூற்றாண்டு பழமை வாய்ந்த மதுரை ஆட்சியர் அலுவலகம் புனரமைப்பு!

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தை பொதுப்பணித் துறையின் புராதனப் பிரிவு புனரமைக்கத் தொடங்கியுள்ளது.

மதுரை பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நூற்றாண்டு பழமை வாய்ந்த மதுரை ஆட்சியர் அலுவக கட்டடம்
நூற்றாண்டு பழமை வாய்ந்த மதுரை ஆட்சியர் அலுவலகம் புனரமைப்பு
author img

By

Published : Jun 22, 2021, 3:51 PM IST

மதுரை: தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையின் புராதனக் கட்டடங்கள் பாதுகாப்பு பிரிவு, முதல் கட்டமாக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 24 பாரம்பரிய பெருமை மிக்க இடங்களை அடையாளம் கண்டு அவற்றை புனரமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பணிகளைத் தொடங்கியுள்ளது.

புதிய ஆட்சியர் அலுவலகம்

கடந்த 1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தற்போது 100 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கிறது. முன்னதாக இந்த வளாகத்திலேயே புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

பழைய ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தில் இயங்கிய பெரும்பாலான அலுவலகங்கள் தற்போது புதிய அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் இரண்டு இடங்கள்

நூற்றாண்டு பாரம்பரியம் வாய்ந்த மதுரை மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் தற்போது பொதுப்பணித்துறையால் புனரமைக்கப்பட்டு வருகிறது. மதுரையில் இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 4.30 கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் அரண்மனையும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பொதுப்பணித்துறை வைகை பெரியாறு பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த புனரமைப்புப் பணி, பொதுப்பணித்துறையின்கீழ் செயல்படும் புராதனக் கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கோட்ட அலுவலர்களின் கண்காணிப்பில் நடைபெறும் என அத்துறையின் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'தி ஃபேமிலி மேன்' 3ஆம் பாகத்தில் விஜய் சேதுபதி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.