இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மதுரை - சென்னை இடையே இயங்கும் தேஜஸ் விரைவு வண்டிகளை ஜனவரி 4 ஆம் தேதி முதல் ரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பயணிகள் வருகை குறைவால் ரத்து என்பது ஏற்கக்கூடியதல்ல. கொள்ளைநோய் காலத்தில் மக்கள் கூட்டமாக செல்வது தவிர்க்க வேண்டிய ஒன்று. இந்த சூழலில் முழு அளவில் பயணிகள் பயணிக்க எதிர்பார்க்க முடியாது.
பயணிகளின் வருகை குறைவுக்கு காரணம் இரண்டு. ஒன்று மிகவும் தேவையான பயணங்களை மட்டுமே மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசே அறிவித்துள்ளதால், மக்களும் அதனை பின்பற்றுகின்றனர். இன்னொரு காரணம் கட்டுப்படியாகாத கட்டணமாகும். இதே தடத்தில் ஓடக்கூடிய வைகை எக்ஸ்பிரஸ் கட்டணத்தை விட இதன் கட்டணம் 35% அதிகமாகும்.
தேஜஸ் எக்ஸ்பிரஸ்-ஐ போலவே சென்னையிலிருந்து கோயம்புத்தூர் பெங்களூர் ஆகிய நிலையங்களுக்கு ஓடிக்கொண்டிருந்த சதாப்தி எக்ஸ்பிரஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றிற்கும் அதே காரணம் கூறப்பட்டுள்ளது. டெல்லிக்கும் லக்னோவுக்கும் மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையே ஓடிவந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் கூட ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். அவற்றுக்கும் இதே காரணம் கூறப்பட்டுள்ளது. எனவே, கொள்ளைநோய் காலத்தில் அவசர காரணங்களுக்கு பயணம் செய்யும் சாதாரண மக்களை கருத்தில் கொண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ்களை ரத்து செய்வதை கைவிட வேண்டும் “ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: சுவர் விளம்பரம் செய்ய முயன்ற மநீம நிர்வாகிகள்: தடுத்து நிறுத்திய நெடுஞ்சாலைத் துறை