மதுரை மீனாட்சியம்மன் கோயில், அதன் உப கோயில்களின் உண்டியல் திறப்பு, கோயில் இணை ஆணையர் க. செல்லத்துரை முன்னிலையில் நேற்று (டிச. 12) நடைபெற்றன.
இந்நிகழ்வில் கூடலழகர் கோயில் உதவி ஆணையர் மு. ராமசாமி, அறங்காவலர் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், இந்து சமய அறநிலையத் துறை தெற்கு வடக்கு சரக ஆய்வாளர்கள், கோயில் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உண்டியல் திறப்பின்போது ரொக்கமாக 62 லட்சம் ரூபாய், பல மாற்று பொன் இனங்கள் 550 கிராம், பல மாற்று வெள்ளி மூன்று கிலோ 870 கிராம், அத்துடன் அயல்நாட்டு கரன்சி நோட்டுகள் 27 ஆகியவை எண்ணப்பட்டன.