மதுரை: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, கரோனா பெருந்தொற்று நெருக்கடி நேரத்தில் உணவின்றித் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கும் பொருட்டு, இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் இயங்கும் கோயில்களில் இருந்து உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, முதல் நாளான இன்று (மே 13) உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சார்பில் 2000 உணவுப்பொட்டலங்கள், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: கரோனா மருந்து பெட்டகத்தில் ஸ்டாலின், கருணாநிதி படம்