ETV Bharat / city

பூப்பல்லக்கில் வீதி உலா வந்த மீனாட்சியும் சொக்கரும்! - பூப்பல்லக்கில் வீதி உலா வந்த மீனாட்சியும் சொக்கரும்

மதுரையில் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் மாசி வீதிகளில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பூப்பல்லக்கில் வீதி உலா
பூப்பல்லக்கில் வீதி உலா
author img

By

Published : Apr 15, 2022, 7:27 AM IST

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப். 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

விழாவின் 8ஆவது நாள் நிகழ்வாக பட்டாபிஷேகம் நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் (ஏப்.13) இரவு 9ஆவது நாளாக மீனாட்சியம்மன் திக்குவிஜயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (ஏப்.14) காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

பூப்பல்லக்கில் வீதி உலா

அதனைத் தொடர்ந்து மாலை மீனாட்சி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கிலும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும் எழுந்தருளி நான்கு மாசி வீதியிலும் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் மயில் வாகனத்திலும், பவளக்கனிவாய் பெருமாள் கருட வாகனத்திலும் வீதி உலாவாக சென்று மாசி வீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் முன் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

இதையும் படிங்க: மதுரையின் அரசி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் : 2 டன் வண்ண மலர்களால் மேடை அலங்காரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.