ETV Bharat / city

'இனி செல்போனை மடித்து வைத்துக் கொள்ளலாம்' - வியக்க வைக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் - மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

மதுரை: செல்போன், தொலைக்காட்சி, கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மடித்தோ அல்லது சுருட்டியோ கொண்டு செல்லும் வகையிலான தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஏறக்குறைய நிறைவை எட்டியுள்ளது மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் துறை. அது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...

kamaraj
kamaraj
author img

By

Published : Apr 27, 2020, 10:37 PM IST

மின்னணு தொழில்நுட்ப உலகம் நொடிக்கு நொடி பல்வேறு மாற்றங்களுடன் வியக்க வைக்கும் வகையில் வளர்ந்து வரும் இன்றையக் காலக்கட்டத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் துறை, மிகப் பெரும் சாதனை கண்டுபிடிப்பு ஒன்றை சத்தமில்லாமல் நிகழ்த்தியுள்ளது.

செல்பேசி, கணினி, தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் இன்றைய வாழ்வு முறையில் மிக மிக அத்தியாவசியமாக இருக்கின்றன. ஆனால் இடத்தைப் பெருமளவு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இப்பொருள்களை 'நுண் குழைமக் கருவி' (மைக்ரோ ஃபுளுயிடிக் டிவைஸ்-Micro Fluidic Device) மூலமாக மடித்தோ, சுருட்டியோ இனி எங்கும் கொண்டு செல்லலாம்.

மின்னணு சாதனங்களில் உள்ள அனைத்து நுண் கருவிகளையும், நுண் குழைமக் கருவிகளாக மாற்றம் செய்துவிட்டால் மடித்தோ, சுருட்டியோ கொண்டு செல்ல முடியும். இந்த ஆய்வினை 70 சதவிகிதத்திற்கும் மேல் வெற்றிகரமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் துறை நிறைவு செய்துள்ளது. மின்னணு தொழில்நுட்ப உலகில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாபெரும் மாற்றத்தை இந்தக் கண்டுபிடிப்பு உருவாக்கப்போகிறது என்கின்றனர் துறை சார்ந்த வல்லுநர்கள்.

'இனி செல்ஃபோனை மடித்து வைத்துக் கொள்ளலாம்' - வியக்க வைக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

உலகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த நுண் குழைமக் கருவி குறித்த ஆய்வில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சீனா ஆகியவை முன்னணியில் உள்ளன. இந்தியாவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மட்டுமே இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இக்கருவி வணிகரீதியாக இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை மேற்கொண்டுள்ள இந்த ஆய்வுக்கு டெல்லியிலுள்ள அறிவியல் தொழில்நுட்பத் துறையும் நிதியுதவி அளித்துள்ளது.

ஆர்ப்பாட்டமின்றி நடைபெறும் இந்த ஆய்வு, மின்னணு தொழில்நுட்பத்தில் மிகப் பெரும் மைல்கல்லை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்பதையே காட்டுகிறது. நுண் குழைமக் கருவி குறித்த ஆய்வு முடிவுகள் முழுமையாக வெளிவரும் நேரத்தில், உலகளவில் இந்தியாவின் பெருமையை ஒருபடி மேலே உயர்த்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இதையும் படிங்க: தீக்கிரையாகும் செவ்வரளி செடிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.