ETV Bharat / city

16 வயது சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை எப்போது கைது செய்வீர்கள்? - Thiruchendur 16 year old girl rape

தூத்துக்குடியில் 16 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட எஸ்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

tn-mdu-hc-01-sexual-harass-tuticorin-script-7208110

author img

By

Published : Mar 25, 2022, 6:33 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக அர்ஜுனபாண்டி மற்றும் அவரது மகன்கள் கிருஷ்ணபாண்டி, பாலகிருஷ்ணன், சூரியநாராயணன் ஆகியோர் மீது திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் நான்குபேரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் மிகவும் கொடூரமாக சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார் . ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆகவே எப்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். நான்கு பேரும் எப்போது கைது செய்யப்படுவார்கள் என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெண் எஸ்பி பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.