ETV Bharat / city

விதிகளை மீறும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது உடனடி நடவடிக்கை..!

மதுரை: விதிகளை மீறும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர்கள் அந்தஸ்துள்ள அலுவலர்களை கொண்ட குழுவை அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By

Published : Jul 1, 2019, 7:40 PM IST

திருவிடைமருதூர், மேலையூரை சேர்ந்த செல்வகுருநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பொதுவாகக் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பணி செய்யும் கிராமத்திலேயேதான் தங்க வேண்டும் என்பது அரசாங்க விதி. ஆனால், மேலையூர் வருவாய் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர், இதற்கு முரணாகத் தான் பணி செய்யும் இடத்திலிருந்து வெகு தொலைவில் தங்கி தினமும் வந்து செல்கிறார். பொறுப்பற்றத்தனமாகக் காலை 11 மணியளவில் அலுவலகம் வந்துவிட்டு, பகல் ஒரு மணியளவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செல்வதாகக் கூறிவிட்டு தான் தங்கும் இடத்திற்குச் சென்று விடுகிறார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், தனது சொந்த மாவட்டத்திற்குச் சென்றுவிட்டு, திங்கட்கிழமை மதியம்தான் மீண்டும் பணிக்குத் திரும்புகிறார். இந்நிலையில் மானிய விலையில் விவசாயத்திற்கான மின் மோட்டார் வாங்குவதற்கான தகுதிச் சான்றிதழ் பெறக் கிராம நிர்வாக அலுவலரை அணுக சென்றபோது, அலுவலகம் பூட்டிய நிலையிலேயே இருந்தது. இதனால் என்னால் அம்மானிய விலையிலான மோட்டாரை பெற முடியவில்லை. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த மார்ச் 9ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தேன்.

இதையடுத்து எனது புகாரை ஆட்சியர், தஞ்சாவூர் தாசில்தாருக்கு பரிந்துரைத்தார். ஆனால் தொடர்ந்து மேலையூர் கிராம நிர்வாக அலுவலர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மேலையூர் கிராம நிர்வாக அலுவலர் அங்கேயே தங்கி பணியாற்றுமாறு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், "கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடத்தை விட்டு வெளியே செல்ல, அவர்கள் பணிபுரியும் தாலுகா வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்பது விதியாகும். இதை மீறும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வரும் புகார்களை விசாரிக்க, இரு வட்டாட்சியர்கள் அந்தஸ்துள்ள அதிகாரியை நியமித்து, புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஆகஸ்ட் ஒன்றில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Intro:பணியிடத்தை விட்டு வெளியே செல்வதற்கான விதியை மீறும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வரும் புகா்களை விசாரிக்க மாவட்ட ஆட்சியர்கள் வருவாய் கோட்டாட்சியர் அந்தஸ்து க்கு குறையாத அதிகாரிகள் தலைமையில் இரு வட்டாட்சியர்கள் அந்தஸ்துள்ள அதிகாரியை நியமித்து அவர்கள் புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:பணியிடத்தை விட்டு வெளியே செல்வதற்கான விதியை மீறும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வரும் புகா்களை விசாரிக்க மாவட்ட ஆட்சியர்கள் வருவாய் கோட்டாட்சியர் அந்தஸ்து க்கு குறையாத அதிகாரிகள் தலைமையில் இரு வட்டாட்சியர்கள் அந்தஸ்துள்ள அதிகாரியை நியமித்து அவர்கள் புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஆகஸ்ட் 1-ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், மேலையூரை சேர்ந்த செல்வகுருநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், " பொதுவாக கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பணி செய்யும் கிராமத்திலேயே தான் தங்க வேண்டும் என்பது அரசாங்க விதி. ஆனால் மேலையூர் வருவாய் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் இதற்கு முரணாக தான் பணி செய்யும் இடத்திலிருந்து வெகு தொலைவில் தங்கி தினமும் வந்து செல்கிறார். பொறப்பற்ற தனமாக காலை 11 மணியளவில் அலுவலகம் வந்துவிட்டு, பகல் 1 மணியளவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செல்வதாக கூறிவிட்டு தான் தங்கும் இடத்திற்கு சென்று விடுகிறார். ஒவ்வொரு வாரம் வெள்ளிக் கிழமையும் தனது சொந்த மாவட்டத்திற்கு சென்றுவிட்டு திங்கட்கிழமை மதியம் தான் மீண்டும் பணிக்கு திரும்புகிறார். இந்நிலையில் மானிய விலையில் விவசாயத்திற்கான மின் மோட்டார் வாங்குவதற்கான தகுதிச் சான்றிதழ் பெற கிராம நிர்வாக அலுவலரை அணுகச் சென்ற போது அலுவலகம் பூட்டிய நிலையிலேயே இருந்தது. இதனால் என்னால் அந்த மானிய விலையிலான மோட்டாரை பெற முடியவில்லை. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மார்ச் 9ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தேன். இதையடுத்து எனது புகாரை ஆட்சியர், தஞ்சாவூர் தாசில்தாருளுக்கு பரிந்துரைத்தார். ஆனால் தொடர்ந்து மேலையூர் கிராம நிர்வாக அலுவலர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படல்லை. எனவே மேலையூர் கிராம நிர்வாக அலுவலர் மேலையூர் வருவாய் கிராமத்திலேயே தங்கி பணியாற்றுமாறு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் ," கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடத்தை விட்டு வெளியே செல்ல, அவர்கள் பணிபுரியும் தாலுகா வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்பது விதியாகும். இதை மீறும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வரும் புகா்களை விசாரிக்க மாவட்ட ஆட்சியர்கள் வருவாய் கோட்டாட்சியர் அந்தஸ்து குறையாக அதிகாரிகள் தலைமையில் இரு வட்டாட்சியர்கள் அந்தஸ்துள்ள அதிகாரியை நியமித்து அவர்கள் புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஆகஸ்ட் 1-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.