ETV Bharat / city

இயக்குனர் ரஞ்சித் வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: இயக்குனர் ரஞ்சித் குறித்து மிகவும் தரக்குறைவாக பேசிய அம்பி வெங்கடேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

இயக்குனர் ரஞ்சித் வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு
author img

By

Published : Jun 27, 2019, 6:57 PM IST

ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் ரஞ்சித் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்று சமூகத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் இயக்குனர் ரஞ்சித்தையும் அவர் சார்ந்த சமூகத்தை மிகவும் தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இதுகுறித்து வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த விடுதலை வீரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் வெங்கடேசனின் பேச்சு இரு சமூகத்திற்கிடையே விரோதம் விளைவிக்கும் வகையில் உள்ளதால் அவர் மீது கடுமையான பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்ய நாராயணன், புகழேந்தி அமர்வு தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ரஞ்சித் தாக்கல் செய்துள்ள வழக்கோடு சேர்த்து இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டனர்.

Intro:இயக்குனர் ரஞ்சித் குறித்து மிகவும் தரக்குறைவாகவும் இழிவாக பேசிய அம்பி வெங்கடேசன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்ய கோரிய வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை என்று உத்தரவிட்டது

Body:மதுரை கொடிக்குளம் மலைச்சாமி புரம் பகுதியை சேர்ந்த வீரன் என்ற விடுதலை வீரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் அதில் பேரரசர் ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் ரஞ்சித் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் இயக்குனர் ரஞ்சித்தை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார் மேலும் அவர் சார்ந்த சமூகத்தை கூறி மிகவும் விரிவாகப் பேசியுள்ளார் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியானது சக்கிலியர் என்கிற சாதி பெயர்களை அருந்ததியர் தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என அரசாணை உள்ளது ஆனாலும் வெங்கடேசன் என்பவர் இரு தரப்பினருக்கும் இடையே விரோதம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளார் எனவே இவர் மீது எஸ்சி எஸ்டி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் இதுகுறித்து நடவடிக்கை கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் மதுரை காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனவே அருந்ததியர் சமூகத்தை பற்றியும் இயக்குனர் ரஞ்சித் குறித்து அவதூறாக பேசிய அம்பி வெங்கடேசன் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் புகழேந்தி அமர்வு தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குனர் ரஞ்சித் தாக்கல் செய்துள்ள வழக்கோடு சேர்த்து இந்த வழக்கையும் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.