ETV Bharat / city

‘நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்திடுக!’ - அரசு அலுவலர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரை: நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தனிநபர் கொடுக்கும் புகார்கள் மீது உரிய அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என அரசு அலுவலர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
author img

By

Published : Jul 13, 2019, 7:47 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை கனட்டான்காட்டைச் சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கு நிலமற்ற ஏழைகள் பிரிவில் அரசு சார்பில் 2015ஆம் ஆண்டு 17 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி நான்கு எல்லையை நிர்ணயம் செய்யக்கோரி வருவாய் அலுவலர்களுக்கு 2015இல் மனு அளித்திருந்தார். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் லெட்சுமி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், "நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது துரதிர்ஷ்டவசமானது. பொதுமக்களின் கோரிக்கையை தாலுகா அளவிலான வருவாய்த்துறை அலுவலர்கள் எப்படி அணுகுகின்றனர் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது.

வருவாய்துறை அலுவலர்கள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கும் நீதிமன்றத்திற்கு வர வேண்டியதுள்ளது. இப்போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை ஒரு வழக்கமாகவே அரசு அலுவலர்கள் வைத்துள்ளனர். இதை ஏற்க முடியாது. இதனை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இதனால் மனுதாரரின் கோரிக்கையை அந்த அலுவலர்கள் நான்கு வாரத்தில் நிறைவேற்ற வேண்டும். தவறினால் அவர்கள் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும். இந்த தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

Intro:நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது துரதிர்ஷ்டவசமானது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

இப்போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை ஒரு வழக்கமாகவே அதிகாரிகள் வைத்துள்ளனர். இதை ஏற்க முடியாது. நிறுத்திக் கொள்ள வேண்டும் - நீதிமன்றம்Body:நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது துரதிர்ஷ்டவசமானது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

இப்போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை ஒரு வழக்கமாகவே அதிகாரிகள் வைத்துள்ளனர். இதை ஏற்க முடியாது. நிறுத்திக் கொள்ள வேண்டும் - நீதிமன்றம்

ராமநாதபுரம் திருவாடனை கனட்டான்காட்டை சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கு நிலமற்ற ஏழைகள் பிரிவில் அரசு சார்பில் 2015-ல் 17 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்திருந்தனர்.

அந்த ஆக்கிரமிப்பை அகற்றி நான்கு எல்லையை நிர்ணயம் செய்யக்கோரி வருவாய் அதிகாரிகளுக்கு 2015-ல் மனு அளித்தார்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரரின் மனுவை பரிசீலிக்க 2015-ல் உத்தரவிட்டது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காத நிலையில் லெட்சுமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் ,"
நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது துரதிர்ஷ்டவசமானது. பொதுமக்களின் கோரிக்கையை தாலுகா அளவிலான வருவாய்த்துறை அதிகாரிகள் எப்படி அணுகுகின்றனர் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது.

வருவாய் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கும் நீதிமன்றத்திற்கு வர வேண்டியதுள்ளது.

இப்போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை ஒரு வழக்கமாகவே அதிகாரிகள் வைத்துள்ளனர். இதை ஏற்க முடியாது. நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மனுதாரரின் கோரிக்கையை அதிகாரிகள் 4 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும். தவறினால் அதிகாரிகள் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்.

இந்த தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக 13.8.2019-ல் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவில் கூறியுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.